உண்மையா உழைச்சா கூட நிப்போம்னு… டிராகன் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து!

3 days ago
ARTICLE AD BOX

உண்மையா உழைச்சா கூட நிப்போம்னு… டிராகன் வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்த அஸ்வத் மாரிமுத்து!

விஜய்யின் GOAT படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் நேற்று ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படம் மிகப்பெரிய அளவில் வசூலிக்கும் என இப்போதே கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. லவ் டுடே வெற்றியை அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி அல்ல என்று ப்ரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு சென்ற ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்கள் இயக்குனர் வைத்திருந்ததாக ரசிகர்கள் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டிராகன் படம் குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து “உண்மையா உழைச்சா என்ன ஆனாலும் கூட நிப்போம்னு மறுபடியும் உணர வச்ச தமிழ் மக்களுக்கு  இந்த வெற்றியை மனசார சமர்ப்பிக்கிறேன். என்னுடைய படத்தின் பெயர் ‘டிராகன்’ என்று பதிவிட்டுள்ளார். 
Read Entire Article