ARTICLE AD BOX
போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 14ஆம் தேதி ரோம் நகரில் உள்ள காமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதால், நிமோனியா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் போப் பிரான்சிஸூக்கு ரத்தம் உறைதலுக்கு தேவையான ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறைந்ததால், ரத்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, போப் பிரான்சிஸூக்கு சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் உடல்நலம் குணமடைய வேண்டி, உலகம் முழுவதும் ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.