உடல் எடையை டக்குன்னு குறைக்கணுமா..? அப்படினா Black Coffee-ஐ இப்படி குடிச்சி பாருங்க..!!

3 hours ago
ARTICLE AD BOX

காஃபி இல்லாத காலையை கனவில் கூட விரும்பாதவரா நீங்கள்? காபி குடித்தவுடன் கிடைக்கும் புத்துணர்ச்சியை பெறுவதற்காகவே பலர் விரும்பி குடிப்பர். ப்ளாக் காபியில் பட்டை மற்றும் தேன் கலந்து குடிப்பது சிறந்த புத்துணர்ச்சியை கொடுக்கும். அதேநேரத்தில் கஃபைன் நிறைந்த பானம் உடல் எடையை குறைக்க உதவும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? காபி மனதை புத்துணர்வாக்குவது மட்டுமில்லாமல் சோர்ந்த உடலையும் எனர்ஜி ஆக்குகிறது.

அதேசமயம் சில ஸ்மார்ட் ஐடியாக்களில் காபியும் உடலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்பதும் ஒன்று. சர்க்கரை சுவையூட்டிகள் இல்லாமல் காபி குடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிப்பதுடன், எடை குறைப்பிலும் பெரும்பங்காற்றுகிறது. காபியானது பசியை கட்டுப்படுத்துவதால் உடலில் சேரும் கலோரி அளவையும் குறைக்கிறது. உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பு காபி குடிப்பவர்களால் அதிக உணவை எடுத்துக்கொள்ள முடிவதில்லை என்கிறது ஆய்வு.

குறைந்த கலோரிகளை மட்டுமே எடுத்துக்கொள்வதுடன், அதிக உடலுழைப்பு கொடுப்பது எடையை குறைப்பை வேகமாக்குகிறது. காபியிலுள்ள கஃபைனானது உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கிறது, எடையை கட்டுக்குள் வைக்கிறது, கலோரிகளை எரிக்கும் வேகத்தை அதிகரிக்கிறது. காபியில் கஃபைன் தவிர, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் ஆண்டி ஆக்சிண்டடுகள் நிறைந்திருப்பதால் மெட்டபாலிசத்தை ஊக்குவிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

காபி குடிப்பது ஒரு நிறைவான உணர்வை கொடுக்கும். ஒரு கப் குடித்தாலே இரு நிறைவான உணர்வு கிடைக்கும். காபி குடித்துவிட்டால் உணவு சாப்பிடும் உணர்வை தூண்டாது. காபியானது ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் மற்றும் உணவுகளுக்கு மாற்றாக அமையலாம். ஒரு கப் ப்ளாக் காபியில் ஐந்துக்கும் குறைவான கலோரிகளே இருக்கிறது. இது குறைந்த கலோரி பானமாக இருப்பதால் தினசரி குடிப்பது சிறந்த தேர்வாக இருக்கும்.

மெட்டபாலிசத்தை ஊக்குவித்து கலோரிகளை எரித்து அதிக எனர்ஜியை கொடுப்பதால் காபியானது தனது உடனடி தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. தீவிர ஜிம் பயிற்சிகளை மேற்கொள்பவராக இருந்தால் ஒரு கப் சூடான காபி குடித்துவிட்டு செல்லலாம். இது நீண்ட நேரத்திற்கு எனர்ஜியை கொடுக்கிறது. மேலும் டோபமைன் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுவதால் அதிக கலோரிகளை எரிக்க எனர்ஜியை கொடுக்கிறது.

Read More : 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்..!! உங்கள் மாவட்டத்திற்கு யார் தெரியுமா..? தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!

The post உடல் எடையை டக்குன்னு குறைக்கணுமா..? அப்படினா Black Coffee-ஐ இப்படி குடிச்சி பாருங்க..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article