உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கும் '5' பானங்கள்.. நம்ப முடியாத பலன்கள்!!

2 hours ago
ARTICLE AD BOX

எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் முயற்சி செய்தால் முடியாதது என்று ஏதுமில்லை. உடல் எடையை குறைக்க பெரும்பாலானோர் பல்வேறு முறைகளை முயற்சிக்கும் ஒரு இலக்காகும். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவை எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், உடற்பயிற்சி ஏதும் இல்லாமல் சில ஆரோக்கியமான பானங்களை குடிப்பதன் மூலம் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம் தெரியுமா? ஆம், நீங்கள் உங்களது எடையை வேகமாக குறைக்க விரும்பினால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள 5  காலை பானங்களுடன் உங்களது நாளை தொடங்குங்கள். இந்த பானங்கள் உங்களது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும், கொழுப்பை கரைக்கவும் பெரிதும் உதவுகிறது. 

1. இஞ்சி தண்ணீர்:

தேவையான பொருட்கள்:

இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு

செய்முறை:

முதலில் இஞ்சியை நன்கு கழுவி தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். 

நன்மைகள்:

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இது வளர்ச்சிதை மாற்றத்தை விரிவுப்படுத்துகிறது. இஞ்சி அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. 

குறிப்பு : உங்களுக்கு ஏற்கனவே பல் தேய்மானம், பல் கூச்சம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை சாறு சேர்ப்பதே தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: 'கிராம்பு' வச்சு இப்படி ஒரு ட்ரிங் செஞ்சி குடிங்க; உடல் எடை மளமளவென குறையும்!

2. சீரகத் தண்ணீர்:

உடல் எடையை குறைக்க சீரக தண்ணீர் பெரிதும் உதவுகிறது. சீரகத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சீரகத் தண்ணீர் தயாரிப்பது எப்படி?

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு சீரகத்தை போட்டு இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு பிறகு மறுநாள் காலை அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும் மற்றும் அதிக கலோரிகள் எரிக்கப்படும். 

சீரக தண்ணீர் நன்மைகள்:

- செரிமான மேம்படும்

- பசி அடங்கும்

- உடலை நச்சு நீக்கும்

- வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கும்

- இதய தசைகளை வலுப்படுத்தும்

- கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்

- உடலில் கொழுப்புகள் சேருவதைத் தடுக்கும்.

இதையும் படிங்க:  தொப்பையை கரைக்க இனி கஷ்டப்படாதீங்க.. தினமும் காலை இந்த அஞ்சுல ஒன்னு குடிங்க..!

3. லெமன் வாட்டர்:

தேவையான பொருட்கள்:

சூடான நீர், எலுமிச்சை, தேன்

செய்முறை:

1 கிளாஸ் சூடான நீரில் அரை எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தேன் சேர்க்காமல் குடித்தால் ரொம்பவே நல்லது. 

நன்மைகள்:

- செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கலை குறைக்கும் மற்றும் குடலை சுத்தம் செய்யும்.

- ஆற்றலைக் கொடுக்கும்

- சிறுநீரகத் தொற்றுக்களில் இருந்து உடலை பாதுகாக்கும்

- வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும் மற்றும் உடலில் கொழுப்பு எரித்து எடையை குறைக்கும்.

4. ஓமம் வாட்டர்

ஓமம் தண்ணீர் வயிற்றில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி உடல் எடையை குறைக்கும்.

ஓமம் வாட்டர் தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணிரை ஊற்றி அதை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஓமத்தை அதில் போட்டு சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். முக்கியமாக அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த நீரை வடிக்கட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இரவு தூங்கும் முன்னும் குடிக்கலாம்.

நன்மைகள்:

- செரிமானத்தை மேம்படுத்தும்
- அமிலத்தன்மையை நீக்கும்
- வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதனால் எடையை குறைத்துவிடலாம்.
- அழற்சி பிரச்சினைக்கு நல்லது.
- வாயு பிரச்சினையை போக்கும்
- சீறுநீரகத் தொற்றுக்கு இந்த நீர் ரொம்பவே நல்லது. 
- மாதவிடாய் வலியை குறைக்கும்.

5. வெந்தய நீர்:

 வெந்தயதை ஊற வைத்து தினமும் காலை அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வெந்தயத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், புரதம், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

வெந்தய தண்ணீர் தயாரிக்கும் முறை:

1 தண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயம் போட்டு இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து பின் மறுநாள் காலையில் அந்த நீரை வடிக்கட்டி குடிக்க வேண்டும். வேண்டுமானால் ஊற வைத்த வெந்தயத்தையும் சாப்பிடலாம். 
மற்றொரு முறை என்னவொ, 2 கிளாஸ் தண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நிறம் மாறும் வரை கொதிக்க விட்டு பின் வடிக்கட்டி குடிக்கவும்.

நன்மைகள்:

- உடலில் இருக்கும் கொலஸ்டிராலைக் குறைக்கும்.

- இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்

- மலச்சிக்கல் பிரச்சினையை சரிசெய்யும்.

- செரிமானத்தை மேம்படுத்தும்

- வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி, எடையை குறைக்க உதவும்.

Read Entire Article