ARTICLE AD BOX

அமெரிக்காவில் சமீப காலங்களாக முட்டை விலை வரலாறு காணாத நிலையை எட்டியுள்ளது. இதற்கு முறையாக ஆய்வு செய்யப்படாத முட்டைகள் நோய் கிருமிகளை பரப்ப வாய்ப்புள்ளதால் அமெரிக்கா முட்டை இறக்குமதியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதே ஆகும். இதனால் சமீப காலங்களாக அமெரிக்காவில் முட்டை கடத்தல் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பத்திரிக்கை தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டில் முட்டைகளின் விலை அதிகரிப்பு காரணமாக மெக்ஸிக்கோ மற்றும் கனடாவில் இருந்து நுகர்வோர்கள் வேறு வழி இன்றி சட்டவிரோதமாக முட்டை கடத்தலில் இறங்குகின்றனர் என தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட தரவுகளின் படி நாடு முழுவதும் 36% முட்டை கடத்தல் சம்பவம் அதிகரித்து உள்ளது. டெக்சாஸ் எல்லையின் ஒரு பகுதியில் மட்டும் பாதுகாப்புத்துறை கண்காணிப்பில் இதுவரை 54% முட்டை பறிமுதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
அமெரிக்காவில் கடந்த மாதம் ஒரு டஜன் உயர்தர முட்டைகளின் விலை 5.9 டாலர் ஆக அதிகரித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பின்படி ஒரு டஜன் முட்டையின் விலை ரூ. 510.74 ஆகும். அமெரிக்காவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு டஜன் முட்டைகளின் விலை 10 டாலராகவும் உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பின்படி ரூ. 865.62 ரூபாய் ஆகும். ஆனால் இதே நேரத்தில் மெக்சிகோவில் ஒரு டஜன் முட்டைகளின் விலை சராசரி 2 டாலருக்கும் குறைவாகவே உள்ளது.