ARTICLE AD BOX
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பினார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்பகுதியை அடைந்தது டிராகன் விண்கல கேப்சூல்.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமியை அடைந்தனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி கோளுக்கு வந்தனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் அன்-டாக் ஆகி பிரிந்துள்ளது. அதிகாலை புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் தரையிறங்கியது. அவர்களுடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவர் டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்பினர். இதை நாசா தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் பூமியை அடைந்தனர்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம், அந்த நாட்டின் விண்வெளி அமைப்பான நாசா உடன் இணைந்து போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த புதிய விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் 4 வீரர்களுக்கு பதிலாக இருவர் மட்டுமே சென்றனர். தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மற்றும் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் ஆகியோர் உட்பட 7 பேர் உள்ளனர்.
The post 9 மாதங்களுக்கு பின் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.