உங்கள் குழந்தை அதிக நேரம் மொபைல் பார்க்கிறதா?...கட்டுப்படுத்த இதை செய்து பாருங்க

4 days ago
ARTICLE AD BOX

குழந்தைகள் தற்போது மிகவும் இளவயதிலேயே மொபைல் போன்களை அதிகமாகப் பயன்படுத்த தொடங்குகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால் கல்வி, தகவல் அறிந்து கொள்ளுதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை எளிதாக கிடைக்கின்றன. இருப்பினும், தொடர்ந்து மொபைல் பயன்படுத்துவது குழந்தைகளின் உடல்நலத்துக்கும், மனநிலைக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, பெற்றோர்கள் சில புத்திசாலித்தனமான வழிகளைப் பயன்படுத்தி அவர்களின் மொபைல் பழக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

மொபைல் கட்டுப்பாட்டை குறைக்கும் வழிகள் :

1. குடும்ப ஒப்பந்தம் :

குழந்தைகளுடன் புரிந்து கொண்டு, அவர்களின் கைபேசி பயன்பாட்டை கட்டுப்படுத்த ஒரு எளிய ஒப்பந்தத்தை உருவாக்கலாம். இது, ஒரு நாளுக்கு எந்த நேரத்தில், எவ்வளவு நேரம் மொபைல் பயன்படுத்தலாம்? கல்வி தொடர்பான பயன்பாடு மற்றும் பொழுதுபோக்குக்கான நேரம் எவ்வாறு பிரிக்கப்படும்?
தூங்கும் நேரத்திற்கு முன்பு மொபைல் பயன்படுத்த வேண்டும், சாப்பிடும் போது மற்றும் குடும்பத்தினர்கள் ஒன்றாக இருக்கும் போது மொபைல் பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற கட்டுபாடுகளை குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பேசி, நடைமுறைப்படுத்தலாம்.

2. பெற்றோர்களே முன்னுதாரணமாக இருங்கள் :

குழந்தைகள் பெற்றோர்களைப் பார்த்து தான் பழகுகிறார்கள். நீங்கள் தொடர்ந்து மொபைலை பயன்படுத்தினால், அவர்கள் அதை தவிர்க்க இயலாது. எனவே, உங்கள் மொபைல் பயன்பாட்டை குறைத்து குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். இரவு நேரங்களில் மொபைல் ஒதுக்கிவைக்க ஒரு குறிப்பிட்ட இடம் வைக்கலாம். மொபைல் இல்லாமல் சில நேரங்களைச் செலவிடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

3. மொபைலுக்கு நோ சொல்ல வேண்டிய நேரங்கள் :

* தவிர்க்க வேண்டிய நேரம் – காலை உணவு, இரவு உணவு, குடும்ப நேரம் போன்ற தருணங்களில் மொபைல் பயன்படுத்தக்கூடாது.
* தூக்கத்திற்கு முன்பு – கணினி, டேப்லெட், மொபைல் ஆகியவற்றை தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு தூரமாக வைக்க வேண்டும்.
* விளையாட்டு நேரம் – குழந்தைகளுக்குப் பலமான உடல் இயக்கம் தேவையுள்ளது. மொபைலை விட்டு வெளியே சென்று விளையாடச் செய்யுங்கள்.

4. எதற்காக பயன்படுத்த வேண்டும்?

கைபேசி முற்றிலும் தவிர்க்க முடியாத ஒரு கருவியாக மாறிவிட்டது. எனவே,
* கல்விக்கான பயன்பாட்டை ஊக்குவிக்குங்கள் – கணிதம், அறிவியல், மொழிகள் போன்ற பாடங்களை பயில உதவும் செயலிகளை பதிவிறக்கம் செய்து வையுங்கள்.
* படிப்பு மற்றும் சுய மேம்பாட்டிற்கான வீடியோக்களைப் பார்ப்பதற்கு அனுமதியுங்கள்.
* மொபைல் நேரத்தை கட்டுப்படுத்தும் செயலிகளை பயன்படுத்தலாம்.

5. மாற்று செயல்பாடுகளை உருவாக்குங்கள்

குழந்தைகள் மொபைலைப் பயன்படுத்தாமல் இருக்க, அவர்களுக்கு விருப்பமான புதிய பொழுதுபோக்குகளை உருவாக்குங்கள்.
* புத்தகங்களை படிக்க ஊக்குவிக்கலாம்.
* ஓவியம், இசை, கலை, விளையாட்டுகள் போன்ற ஆர்வங்களை வளர்க்கலாம்.
* குடும்பத்துடன் இணைந்து தோட்ட பராமரிப்பு, வீட்டை சுத்தம் செய்வது போன்ற செயல்பாடுகளை செய்ய பழக்கலாம்.

6. பரிசுகள் வழங்குங்கள் :

* கைபேசி குறைவாகப் பயன்படுத்தினால் சிறிய பரிசுகள் வழங்கலாம்.
* நல்ல பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் பாயிண்ட்ஸ் அடிப்படையிலான சவால் முறையை அமல்படுத்தலாம்.

7. தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் :

* Screen Time Limit – IOS, Android ஆகியவற்றில் உள்ள செயலிகளை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் மொபைல் பயன்பாட்டை கண்காணிக்கலாம்.
* Parental Control Settings – தேவையற்ற செயலிகள், விளம்பரங்கள் மற்றும் இணையதளங்களை தடுக்கலாம்.
* Safe Mode – குழந்தைகளுக்கேற்ப இணையத் தரவை வடிகட்டி வழங்கலாம்.

8. நேரடி தொடர்பை ஊக்குவிக்கவும்
* குழந்தைகளுக்கு நண்பர்களுடன் நேரில் பேசும் பழக்கத்தை உருவாக்குங்கள்.
* மொபைல் மூலம் மட்டுமே உறவுகளை வளர்த்துக் கொள்ளும் பழக்கம் வந்துவிடாதபடி கவனிக்க வேண்டும்.

குழந்தைகளின் கைபேசி பயன்பாட்டை கட்டுப்படுத்துவது பெற்றோர்களின் கடமை. ஆனால், அதை கட்டாயமாக செய்து அவர்கள் மனஉளைச்சல் அடையாமல், உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்துவிட, சிறப்பான வழிகளைப் பயன்படுத்த வேண்டும். சிறப்பாக நிர்வகிக்க முன்னுதாரணமாக செயல்பட்டு, அவர்களுக்குப் புதிய பொழுதுபோக்குகளை உருவாக்கி, ஒரு நல்ல சமநிலையை உருவாக்குவது முக்கியம்.

Read Entire Article