ARTICLE AD BOX
உங்களை பார்த்து நடுங்கிட்டு இருக்கோம்.. விஜய்யிடம் ஃபோனில் பேசிய தனுஷ்.. எந்த ஈகோவும் இல்லை
சென்னை: தனுஷ் இப்போது தேரே இஷ்க் மெய்ன் என்கிற ஹிந்தி படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கிவருகிறார். ஹீரோயினாக கீர்த்தி சனோன் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இதற்கிடையே சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்திலும், தானே இயக்கியிருக்கும் இட்லி கடை திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். இவை தவிர்த்து ஏகப்பட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன.
நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கிவருபவர். அவரது நடிப்புகென்று திரைத்துறையிலேயே பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளையும் அவர் வாங்கியிருக்கிறார். தற்போதைய தேதிக்கு இந்திய சினிமாவில் டாப் 10 சிறந்த நடிகர்கள் லிஸ்ட்டை எடுத்தால் அதில் கண்டிப்பாக தனுஷும் இருப்பார். இயக்குநர் இமயம் பாரதிராஜா முதற்கொண்டு பலரும் தனுஷின் நடிப்பை சிலாகித்து பேசியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநராகவும் தனுஷ்: அவர் நடிகராக நிலைக்கவே மாட்டார் என்றுதான் தனுஷ் நடிக்க வந்தபோது பலரும் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அவர் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருக்கிறார். முதன்முதலில் அவர் இயக்கிய பவர் பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அந்தப் படத்துக்கு பிறகு தனது சகோதரி மகன் பவிஷை ஹீரோவாக வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார். அதுவும் பெரிதாக ஹிட்டாகவில்லை.

இட்லி கடை தனுஷ்: இப்போது அவர் இட்லி கடை என்கிற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனனும், முக்கியமான கேரக்டரில் அருண் விஜய்யும் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் பத்தாம் தேதி படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அன்றைய தினம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. இதன் காரணமாக அஜித்துக்கு போட்டியாக களமிறங்குவது அவ்வளவு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்த தனுஷ் ரிலீஸை தள்ளி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய்க்கு அவர்களோடுதான் நேரம் செலவழிக்கணுமாம்.. அவங்க இல்லைனா அவ்ளோதானாம்.. யார் தெரியுமா?
பிற படங்கள்: இட்லி கடை படம் தவிர்த்து தனுஷ் கைகளில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் இயக்கத்தில் ஒரு படம், போர்த்தொழில் இயக்குநர் இயக்கத்தில் ஒரு படம், இளையராஜாவின் பயோபிக் என ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. மேலும் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா என்கிற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமும் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் பாலிவுட்டில்: இதற்கிடையே தனுஷ் ஏற்கனவே ராஞ்சனா, ஷமிதாப் என பாலிவுட் படங்களிலும் நடித்து தனது தடத்தை பதித்திருக்கிறார். தற்போது மீண்டும் ஹிந்தியில் நடிக்கிறார். அந்தவகையில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகிவரும் தேரே இஷ்க் மெய்ன் என்கிற படத்தில்தான் ஹீரோவாக நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துவருகிறார். ராஞ்சனா போல் இந்தப் படமும் ஹிந்தியில் வசூல் சாதனை படைக்கும் என்று தனுஷ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யிடம் பேசிய தனுஷ்: இந்நிலையில் விஜய் மற்றும் தனுஷ் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது தனுஷ் நடித்த படிக்காதவன் படமும், விஜய் நடித்த வில்லு திரைப்படம் ஒரே சமயத்தில் ரிலீஸானது. அந்த சமயத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த விஜய்யிடம் தனுஷ் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், 'வணக்கம் தளபதி' என்று சொல்ல; விஜய்யோ, 'வணக்கம் தனுஷ் படிக்காதவன் படத்துக்கு வாழ்த்துகள்' என்று கூறினார். உடனே தனுஷோ, 'ஐயோ அண்ணா உங்களோட வில்லு படம் வருதே. அதை நினைத்து நடுங்கிட்டு இருக்கோம் அண்ணா' என்று கேஷுவலாக கூறினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தனுஷ் ஈகோவே இல்லாம பேசிருக்காரே ப்பா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.