ARTICLE AD BOX
ஹேண்ட் பேக் என்பது அனைத்து வயது பெண்களுக்கும் அத்தியாவசியமான ஒன்று. வேலைக்கு செல்பவரோ, பள்ளி, கல்லூரி, ஷாப்பிங் செல்வோருக்கு ஹேண்ட் பேக் இருப்பது பலவிதங்களில் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த ஹேன்ட் பேக்கை. சரியாக பராமரிக்கவில்லை எனில் பலவித உடல்நலக் குறைபாடுகளை கொடுத்துவிடும்.
ஹேண்ட் பேக்கில் அத்தியாவசியமான பொருள்கள் அன்றி. பலவித பொருட்களை வைத்து அதை ஒரு பக்கமாக மாட்டி செல்லும் போது தோள்பட்டை வலி, முதுகுவலி என சிரமத்தை கொடுத்துவிடும். குறிப்பாக ஒரு பக்கமாக அதிக கனம்கொண்ட ஹேண்ட்பேக் ஐ தினமும் உபயோகிக்க எலும்பு தேய்மானம் தொடங்கிவிடுகிறது. கழுத்துவலி, மூட்டு தேய்மானம் என பிரச்னைகளை கொடுக்க ஆரம்பித்துவிடும்.
ஹேண்ட் பேக் கின் அதன் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பொருள்களை எடை மற்றும் அளவு,ஸ்ட்ராப்பின் நீளம் அதிகமுள்ள ஹேண்ட் பேக் ஐ உபயோகிக்க வேண்டும். தடிமனான தோல் அல்லது ரெக்ஸினால் செய்யப்பட்டதாக இருந்தால் தசைகளில் அழுத்தம் ஏற்படுத்தி அந்த பகுதியில் வலியை ஏற்படுத்தும். பிரச்னைகள் அதிகரிக்கும்போது நரம்புகள் பாதிப்படைந்து அவை சார்ந்த பிரச்னைகளை உண்டாக்கும்.
அதிக கனமான ஹேண்ட் பேக் ஐ உபயோகிக்கும்போது ஒருபக்க தோள்பட்டை ஏறி மற்றொரு தோள்பட்டை இறங்கிவிடும். நின்று கொண்டே பஸ், இரயில் பயணம் அதிக கனமான ஹேண்ட் பேக்குடன் என்பது நாளடைவில் தீராத தோள்பட்டை வலி, கழுத்து, முதுகுவலி யை அளித்து தலைவலி பிரச்னைகளையும் கொடுக்கும்.
இவற்றையெல்லாம் தடுக்க முதலில் ஹேண்ட் பேக் கில் எது அவசியம், எது அவசியமில்லை என்பதை பார்த்து அகற்ற வேண்டும். அவசியமான அடிக்கடி எடுக்கும் பொருளை ஹேன்ட் பேக்கில் வைத்துக்கொண்டு கனமான பொருளை கையில் வைத்துக்கொள்ளும் பையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
தொங்கவிட்டபடி ஹேண்ட் பேக் கை மாட்டிக் கொண்டு பயணிப்பதால் தசைப்பிடிப்பு, இடுப்பு வலி போன்றவை ஏற்படும். மூட்டுதேய்மானம், டிஸ்க் தேய்மானம் வரக் காரணமாக அமையும் இந்த பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கவனமாக இருக்க பின்னாளில் வலி இல்லாத வாழ்க்கை அமையும்.
முடிந்தவரை இரண்டு பக்கமும் மாறி மாறி மாட்டிக் கொள்வது போல் பழக வலி இருக்காது. அவசியமான பொருட்களை வைத்துக் கொண்டு, மற்றவற்றை அகற்ற பழகவேண்டும். ஹேண்ட் பேக் என்பது செளகரியத்திற்கு என்பது போய் எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளும் பை என நினைத்தால் கஷ்டம்தான்.
எனவே ஹேண்ட் பேக்கை முறையாக பராமரித்து ஆரோக்கியம் காப்போம்.