உங்க வீட்டு ஃபிரிட்ஜில் ஐஸ் கட்டிகள் பிடிக்காமல் இருக்க வேண்டுமா?

11 hours ago
ARTICLE AD BOX

னைத்து வீடுகள், கடைகள் என அனைத்திலும் இன்றைய இன்றியமையாத   தேவையான பொருளில் ஃபிரிட்ஜ்.

அதுவும் கோடை காலத்தில் மிகவும் தயிர், மோர், பால், மாவு கெட்டுப் போகாமல் இருக்க மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

ஃபிரிட்ஜின் கதவு அல்லது கேஸ்கட் பழுதடைந்தால் கதவு, கேஸ்கட்டில் நீர் கொட்டும். இதனை மாற்றலாம்.

நீரை ஆவியாக்கும் காயில்  சேதமடைந்தாலும் ஐஸ் கட்டிகள்  சேரும். இதற்கு காயிலை அடிக்கடி சுத்தம் செய்தால் சரியாகும்.

வாட்டர் ஃபில்டர் பழுதானாலும் ஐஸ் கட்டிகள் உருவாகும். பொருட்கள் மீதும் ஐஸ் கட்டிகள் படர்ந்தாலும் வாட்டர் ஃபில்டரை மாற்றவேண்டும்.

ஃபிரிட்ஜ் உள்ள வீட்டில்  சில நேரங்களில் ஃபிரீசரில் ஐஸ் கட்டி அடிக்கடி கட்டிவிடும். அதன் பின்னர் அந்த ஐஸ்கட்டிகளை டி.ப்ராஸ்ட் பட்டனை அழுத்தி கரைக்கலாம்.

பவர்கட் ஆகியும், சில சமயம் ஃபிரிட்ஜ் ஐ சுத்தம் செய்யும்போது ஆஃப் செய்தாலும் ஐஸ் உருகிவிடும்.

ஐஸ் கட்டிகள்  சேராமல் இருக்க ஃப்ரீசருக்குள் சிறிது உப்புத்தூளை ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் தூவலாம்.

ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு கலந்து  பிரீசரில் ஸ்பிரே செய்யலாம்.

ஒரு அலமான பிளாஸ்டிக் பவுலில் சிறிது கல் உப்பு போட்டு  உள்ளே வைத்தால் ஐஸ் கட்டிகள் சேராது.

ஃப்ரீஸரில் ஐஸ் கட்டிகள் மீது சிறிது உப்பை மேலே தூவிவிட்டாலும் கரையும்.

இதையும் படியுங்கள்:
என்னங்கடா, கோதுமைக்கும், தலைமுடிக்கும் இப்படியொரு தொடர்பா?!
Do you want to prevent ice cubes from forming in your fridge?

ஃப்ரீஸரில் ஒரு கனமான காட்டன் டர்க்கி டவல் துணியை மடித்து வைத்தால் ஐஸ் கட்டி எல்லாம் துணி இழுத்துக் கொள்ளும். ஐஸ் உருகி முடித்ததும் துணியை எடுத்து விடவும்.

எந்த வேலை செய்தாலும் ஃப்ரிட்ஜை ஆஃ செய்து விட்டு செய்யவும்.

ஃப்ரிட்ஜ் உள்ளே சுத்தம் செய்யும்போது கெமிக்கல் கலந்த ஸ்பிரே, லிக்விட், போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. வினிகர், எலுமிச்சைசாறு, ஆப்ப சோடா போன்றவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

வாரம் ஒருமுறை ஃபிரிட்ஜை சுத்தம் செய்தல் வருடம்  ஒருமுறை பழுது பார்ப்பது அவசியம். ஃப்ரிட்ஜ் நீண்ட நாள் உழைக்க இது மாதிரி செய்தால் பழுது ஏற்படாமல் இருக்கும்.

Read Entire Article