ARTICLE AD BOX
ஒருவரது பிறந்த ராசி அவரது குணத்திலும், எதிர்காலத்திலும் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், சில ராசிக்காரர்கள் பொய் சொல்வதில் மிகப்பெரிய கில்லாடிகளாம்.
அவர்கள் பொய் பேசும்போது அது பொய் என்று கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு திறமையாக பொய் சொல்வார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
தனுசு ராசி
இவர்கள் சாகசம் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். யாருக்காகவும் சுதந்திரத்தை இழக்க விரும்ப மாட்டார்கள். தங்கள் சுதந்திரத்தில் தலை இடாதவர்களிடம் மட்டுமே பழக்கம் வைத்துக் கொள்ள எண்ணுவார்கள். அதே நேரத்தில் உறவுகளுக்கான கமிட்மெண்டுகளில் அவர்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.
எனவே, அதில் இருந்து தப்பிக்க நிறைய பொய்களை கூறுவார்களாம். மேலும், பிறரிடம் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக உண்மையை பொய்யாக திரித்து சுற்றி வளைத்து புரியாத வகையில் பேசி மற்றவர்களை கவரும் எண்ணம் கொண்டிருப்பார்களாம். இது போன்ற பொய்களை சொல்லி மாட்டிக்கொள்ளும் நேரம் வந்தாலும் சிறப்பாக அதை சமாளித்து மீண்டும் தனது பொய்யை தொடர்வார்களாம்.
துலாம் ராசி காரர்கள் :
துலாம் ராசிக்காரர்களின் பேச்சு இயல்பாகவே மற்றவரை கவரும். பெரும்பாலான நேரங்களில் உண்மையை மறைத்து பேசுவார்கள்.
இவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள். எவ்வளவு பொய் வேண்டுமானாலும் சொல்வார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள்
இவர்களிடம் நிறைய ரகசியங்கள் பொதிந்து இருக்கும். இவர்களிடம் இருந்து ஒரு விஷயத்தை வெளிக்கொணர நினைப்பது மிகவும் சவாலானது. இவர்கள் ரகசியங்களை காப்பாற்றுவதற்காக அதிகப்படியான பொய்களை பேசுவார்கள்.
இவர்களது செயல்பாடுகள் மர்மம் நிறைந்ததாகவே இருக்கும். எனவே, அவர்கள் உண்மையை பேசுகிறார்களா அல்லது பொய்யை பேசுகிறார்களா என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவிற்கு கில்லாடித்தனமாக செயல்படுவார்கள்.