உங்க மூளைய உங்க கண்ட்ரோல்ல வெச்சுக்க முடியலையா? ஜாக்கிரதை!

3 hours ago
ARTICLE AD BOX

இப்போல்லாம் பாருங்க, எல்லாமே ஃபாஸ்ட்டா நடக்குது. ஒரு நிமிஷம் வீடியோ, டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்னு கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ள எவ்ளோ விஷயங்கள் ஓடிடுது. நம்ம மூளைக்கு ரெஸ்ட் இல்லாம போச்சுன்னா என்ன ஆகும்னு யோசிச்சுப் பாத்தீங்களா? அதுதான் "மூளை அழுகல் (Brain Rot)"னு சொல்றது. பேரு ஏதோ பயங்கரமா இருக்க மாதிரி இருந்தாலும், இது நம்ம எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சமா வந்துட்டு இருக்குன்னுதான் சொல்லணும்.

இந்த மூளை அழுகல்ன்னா என்னன்னு கேக்குறீங்களா? ஒண்ணுமில்லீங்க, நம்ம மூளைக்கு ரொம்ப அதிகமா வேலை கொடுத்தோம்னா, அது டயர்ட் ஆகிப் போயிடும்ல? அது மாதிரிதான் இதுவும். ஆனா இதுல என்னன்னா, நம்ம மூளைக்கு தேவையில்லாத விஷயங்களையே திரும்பத் திரும்ப கொடுத்துட்டே இருக்கோம். 

உதாரணத்துக்கு, நாள் முழுக்க மொபைல் நோண்டிட்டே இருக்கிறது, கண்டதையும் ஆன்லைன்ல பாத்துட்டே இருக்கிறது, எந்த வேலையும் செய்யாம சோம்பேறியா இருக்ககுறது, இதெல்லாம் பண்ணோம்னா, நம்ம மூளை ஒரு மாதிரி மந்தமாகிடும். சரியா யோசிக்க முடியாது, எதிலும் கவனம் செலுத்த முடியாது, சின்ன விஷயத்துக்குக்கூட டக்குன்னு கோவம் வரும். இதுதான் மூளை அழுகல் பிரச்சனை.

ஏன் இப்படி ஆகுதுன்னு தெரியுமா? நம்ம மூளைக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. ஈஸியா கிடைக்கிற சந்தோஷத்தையே அது திரும்பத் திரும்ப கேட்கும். சின்ன வீடியோ பாக்குறது ஈஸி, உடனே சந்தோஷம் கிடைக்கும். ஆனா அது நம்ம மூளையை சோம்பேறி ஆக்கிடும். கஷ்டப்பட்டு யோசிக்கிற வேலைய செய்ய அது விரும்பவே விரும்பாது. அதனால்தான் படிப்படியா நம்ம மூளையோட கண்ட்ரோல் நமக்கு இல்லாம போயிடுது. ஒரு முக்கியமான வேலை செய்யணும்னு நினைச்சாக்கூட உடனே டயர்ட் ஆகிடும். எதிலும் இன்ட்ரஸ்ட் இல்லாம போயிடும்.

இதையும் படியுங்கள்:
வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள் - அத்தனைக்கும் ஆசைப்படு! ஆசைகளிலிருந்து அறுபடு! எது சரி?
Brain Rot

ஆனா பயப்படாதீங்க, இத சரி பண்ண முடியும். முதல்ல மொபைல், கம்ப்யூட்டர்னு ஸ்கிரீன் டைமை கொஞ்சம் கொஞ்சமா குறைக்கணும். புத்தகம் படிக்கிறது, விளையாடுறது, பிரண்ட்ஸோட பேசுறதுன்னு மூளைக்கு வேற வேலை கொடுக்கணும். தியானம் பண்ணுனா ரொம்ப நல்லது. நம்ம மூளையை திரும்பவும் கண்ட்ரோல் பண்ண கொஞ்சம் டைம் எடுக்கும். ஆனா முயற்சி பண்ணா கண்டிப்பா முடியும். உங்க மூளைய உங்க கண்ட்ரோல்ல வெச்சுக்க இது ரொம்ப முக்கியம். இப்பவே ஸ்டார்ட் பண்ணுங்க.

Read Entire Article