ARTICLE AD BOX
ஃபேஷன் உலகம் இருப்பாலருக்கானது என்றாலும் இயல்பாகவே பெண்கள் அதை அதிகமாகவே கையாளுகின்றனர். புது புது ட்ரெண்டிற்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்வதில் பெண்கள் முனைப்போடு இருப்பார்கள்.
பெண்கள் தங்களை மெருகேற்றி கொள்ள என்னதான் செய்தாலும், அதில் முக்கிய பங்கு வகிப்பது ஹேர் ஸ்டைல்தான். முகத்தின் அழகை மேலும் எடுப்பாக காட்டுவது ஹேர் ஸ்டைல்தான். நீங்கள் காஸ்ட்லியான ட்ரெஸ் அணிந்திருந்து, கோல்டன் பேஷியலே செய்து மேக்கப் போட்டு இருந்தாலும், தலை சீவலில் ஏதேனும் பிசுறு இருந்தால் முகத்தின் அழகே மாறிவிடும். இதை நீங்கள் பல இடங்களில் கவனித்திருக்கலாம்.
மார்டன் ட்ரஸ் அணிந்து ஜடை போட்டாலோ, சேலை அணிந்து தலையை விரித்து போட்டிருந்தாலோ வித்தியாசமாக இருக்கும். தங்களின் முகத்திற்கு ஏற்றவாறும், ட்ரெஸிற்கு ஏற்றவாறும் ஹேர் ஸ்டைலை தேர்வு செய்வது அவசியமாகும். ஹேர்ஸ்டைலை எடுத்துகாட்டுவது நெற்றி தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக நெற்றி அமைந்திருக்கும். அகல நெற்றி, குறுகிய நெற்றி என பல வகைகளில் இருக்கும். ஒவ்வொருவரின் நெற்றிக்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைல் செய்தால் நீங்கள் அழகாக தெரியப்படுவீர்கள்.
குறுகிய நெற்றி:
உங்களுக்கு குறுகிய நெற்றியாக இருந்தால் நீங்கள் பஃப் வகையான ஹேர்ஸ்டைலை சூஸ் செய்யலாம். அது உங்களை அழகாக காட்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கிறவாறு ஹேர்ஸ்டைல் செய்யுங்கள். முழு ஹம்ப் போன்று வைப்பதால் பார்ப்பவர்களுக்கு அது உங்கள் முகம் குறுகி இருப்பதை மறைத்து நீளமாக காட்டும்.
அகலமான நெற்றி:
உங்களது நெற்றி அகலமானதாக இருந்தால் உச்சி சைடாக எடுத்து S வடிவிலான ஹேர்ஸ்டைலை செய்வது உங்களுக்கு அழகாக இருக்கும். இது உங்களை ஓவல் ஷேப்பில் காட்டும்.
உருண்டையான முகம்:
உச்சி எடுத்து சைடில் எடுத்து சீவுவது உங்களை அழகாக காட்டும். இல்லையென்றால், குட்டி பஃப் வைத்து தலை சீவுவதும் உங்களுக்கு எடுப்பாக இருக்கும். பொதுவாக பலருக்கும் இந்த உருண்டையான முக அமைப்பு இருக்கும். உங்களை மேலும் மெருகேற்ற இந்த ஹேர்ஸ்டைல் யூஸ் ஃபுல்லாக இருக்கும்.
ஓவல் முகம்:
உங்கள் முக அமைப்பு ஓவலாக இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏன் தெரியுமா, இந்த முக அமைப்பை கொண்ட நபர்களுக்கு எந்த ஹேர்ஸ்டைல் செய்தாலும் அது அவர்களுக்கு எடுப்பாகதான் இருக்கும்.