ARTICLE AD BOX
கீரை வகைகள் பொதுவாகவே நிறைய சத்துக்கள் உடையது. அதிலும் குறிப்பாக காரைக்கொட்டி கீரை மூல நோய் போன்ற தீவிர பிரச்சனைகளையும் எளிதாக சரி செய்யும் திறன் உடையது. காரக்கொட்டி கீரை அரிதாகவே கிடைக்கிறது. இதில் பன்றி இறைச்சிக்கு நிகராக சத்துக்கள் இருப்பதால் பண்ணிமொட்டான் கீரை எனவும் கூறுவர். இந்த கீரை அனைத்து நேரங்களிலும் முளைக்க கூடியது அல்ல.
மழைக்காலங்களில் மட்டும் களிமண் காடுகள், ஏரி, குளம், வயலுக்கு அருகே காணப்படும். கிழங்கு மேல் வளரக்கூடிய இந்த கீரை இரண்டு வகையாக இருக்கும். ஒன்றில் இலை ஊசிபோல் காணப்படும். மற்றொரு வகையில் இலை பட்டையாக தடிமனாக இருக்கும். இதன் கீரை மற்றும் கிழங்கு இரண்டையும் சமைத்து சாப்பிடலாம். இதனால் மூல நோய் குணமாவதுடன் உடல் சூடு தணியும்.
நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால் செரிமான மண்டலம் சீருடன் இயங்க உதவும். இந்த கீரை குழந்தைகளுக்கு கொடுக்க உகந்தது. இதனால் வயிற்றில் உள்ள புழுக்கள் அகன்று பசியை தூண்டும். மேலும், குழந்தைகளுக்கு மலச்சிக்கல் சரியாகும். இந்த கீரையை புளிக்கொழம்பு, கூட்டு, கடையல் செய்து சாப்பிடலாம். இதில் இருக்கும் கிழங்கை மற்ற கிழங்குகள் போல் வேகவைத்து சமைக்கலாம்.
Read more: சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தை குறைபாட்டுடன் பிறக்குமா..? மருத்துவர் அளித்த விளக்கம்..
The post உங்க குழந்தைக்கு பசியே இல்லையா? அப்போ வாரம் ஒரு முறை இந்த கீரையை குடுங்க.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.