உங்க உடலில் கட்டி இருக்கா? இந்த இலை அற்புத மருந்து: டாக்டர் மைதிலி

4 hours ago
ARTICLE AD BOX

இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் எண்ணற்றை மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும். ஆனால், அவை பார்ப்பதற்கு மிக சாதாரணமாக இருக்கும் காரணத்தினால், அவற்றை பெரும்பாலும் நாம் பயன்படுத்தி இருக்க மாட்டோம்.

Advertisment

குறிப்பாக, பல நோய்களுக்கு மருந்தாக இவை செயல்படுகின்றன. இவற்றை தினசரி உணவாக எடுத்துக் கொண்டாலும், வெளிப்புறமாக பயன்படுத்தும் மருந்தாக எடுத்துக் கொண்டாலும் நிறைய நன்மைகளை அளிக்கக் கூடிய வகையில் இருக்கும்.

அதன்படி, சொடக்கு தக்காளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இதனை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நம் ஆரோக்கியம் மேம்படும். இது தவிர மருந்தாகவும் அதனை எப்படி பயன்படுத்தலாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஒரு சிலருக்கு உடலில் கட்டி காணப்படும். இவை நீண்ட நாட்களாக கரையாமல் அப்படியே இருக்கும். இந்தக் கட்டியை சொடக்கு தக்காளி இலைகளை கொண்டு எளிதாக கரைக்க முடியும் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

அதன்படி, சொடக்கு தக்காளி பழங்கள் மற்றும் இலைகளை சம அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதே அளவிற்கு மஞ்சளையும் எடுத்துக் கொள்ளலாம். இவை மூன்றையும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும்.

இந்த மருந்தை உடலில் கட்டி இருக்கும் இடத்தில் வெளிப்புறமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற கணக்கில் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக தடவ வேண்டும். இப்படி செய்தால் நாளடைவில் கட்டி கரையத் தொடங்கும். அதுமட்டுமின்றி கட்டியினால் ஏற்பட்ட வலியையும் இது குறைக்க உதவுகிறது என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். 

நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read Entire Article