ARTICLE AD BOX
கீவ்: உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்ய அதிபரை வற்புறுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வந்தது. அதன் ஒருபகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் தொலைபேசியில் உரையாடினார்கள். இதன்பிறகு, ரஷ்யாவும், உக்ரைனும் ஒருவருக்கொருவர் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்குவதை 30 நாட்களுக்கு நிறுத்த வேண்டும் என்ற டிரம்பின் திட்டத்திற்கு புடின் ஒப்புக்கொண்டதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் உளவுத்துறை உதவியை நிறுத்த வேண்டும் என்று புடின், டிரம்பிடம் வலியுறுத்தினார். டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை முடிந்த சிறிதுநேரத்தில் உக்ரைன் மீது ரஷ்ய டிரோன்கள் சரமாரி தாக்குதல் நடத்தின. பேச்சுவார்த்தை முடிந்ததும் ரஷ்யா டிரோன்கள் தாக்குதல் நடத்தியதால் டிரம்ப் சமாதான உடன்படிக்கையை ரஷ்யா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
The post உக்ரைன்-ரஷ்யா இடையே ஒரு மாத போர் நிறுத்தம் செய்ய புடின் மறுப்பா? appeared first on Dinakaran.