உக்ரைனை ஏமாற்றிய டிரம்ப்… நடைபெற்ற ஐ.நா வாக்கெடுப்பு… ரஷ்யாவிற்கு வாக்களித்ததால் பரபர…!!

4 hours ago
ARTICLE AD BOX

கடந்த 3 வருடங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், அமைதியான முறையில் தீர்வு காணவும், ஐ.நா பொது சபை நேற்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியதில் ரஷ்யாவிற்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது. மேலும் ரஷ்யாவிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் சமீபத்திய ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அங்கு அமைந்துள்ள டிரம்ப் தலைமையிலான புதிய அரசு ரஷ்யாவிற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்கின்றது.

193 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐ.நா பொது சபை உக்கரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தாங்கள் செய்த விரிவான நியாயமான மற்றும் நீடித்த அமைதியை மேம்படுத்துதல் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு மொத்தம் 93 ஆதரவு வாக்குகளும், 18 எதிரான வாக்குகளும் பதிவாகின. மேலும் 65 பேர் இதில் வாக்கு அளிக்கவில்லை. ஐ.நா பொது சபை வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article