ARTICLE AD BOX

சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் சூரியனிலிருந்து 4ஆவது கோளாக இருப்பது செவ்வாயாகும். இந்தக் கோள் சூரிய குடும்பத்தில் இரண்டாவது சிறிய கோளாகும். கோள்களில் உயிரினங்கள் வாழும் பூமிக்கு அடுத்து இருப்பது செவ்வாய் கோளாகும். இந்தச் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா? என அனைத்து நாடுகளும் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு கியூரியா சிட்டி என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.
அப்போது நடத்திய ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கரிம பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதே போல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் தூசி நிறைந்த பனிக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்து உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் ஜுராங் ரோவர் என்ற கருவியை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி உள்ளது.
இந்த ஆய்வில் 300 கோடி ஆண்டுகளுக்கு பழமையான கடற்கரை படிமங்கள் இருப்பதாக இந்த கருவி தெரிவித்துள்ளது. இந்த தகவல் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. அனைத்து நாடுகளும் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான அடிப்படை புவியியல் கூறுகள் இருக்கிறதா? என ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் இந்த கடல் நீர் பூமியைப் போன்று உப்புத்தன்மை கொண்டதா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.