உக்ரைனுடன் உடன்படிக்கை இல்லையேல்....எச்சரிக்கும் ட்ரம்ப்!!

4 hours ago
ARTICLE AD BOX

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, உக்ரைனுடன் ரஷ்யா ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் ரஷ்யா மீது தடைகள் மற்றும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு ரஷ்யா விற்கும் பொருட்கள் மீது கூடுதல் வரி மற்றும் தடைகள் விதிக்கப்படும். மற்ற நாடுகளுக்கு விற்கும் பொருட்கள் மீதும் தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்யா எண்ணெய் நிறுவனங்களின் அமெரிக்க வங்கிக் கணக்கு மற்றும் பணப்பரிவர்த்தனைகளுக்கு தடை விதித்து உள்ளார் முன்னாள் அதிபர் ஜோ பைடன். ரஷ்யா எண்ணெய் கப்பல்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் -ன் இந்த கெடுவுக்கு ரஷ்யா பணியுமா அல்லது  உக்ரைனுடனான போர் தொடருமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

Read Entire Article