ஈஸ்வரியின் மாஸ்டர் ப்ளான்: நோஸ்கட் செய்த பாக்யா: கோபியுடன் இணைவாரா?

3 days ago
ARTICLE AD BOX

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், கோபி, பாக்யா இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க ஈஸ்வரி ப்ளான் செய்துள்ள நிலையில், இதற்கு கோபி – பாக்யா இருவரும் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஈஸ்வரி சோகமாக உட்கார்ந்திருக்க, கோபி என்ன என்று விசாரிக்கிறார். அப்போது ஈஸ்வரி, என் மகன், பேரன் பிள்ளைகள், சந்தோஷமாக இருப்பதை பார்க்க கொடுத்து வைக்கவில்லை. எல்லார் வீட்டிலும் நார்மலாக நடக்கும் விஷயங்கள் கூட சரிய நடக்கவில்லை என்று சொல்கிறார். அதன்பிறகு நீ வீட்டை விட்டு போறீயா என்று கேட்க கோபி ஆமாம் என்று சொல்கிறார்.

இதை கேட்ட ஈஸ்வரி கடைசி காலத்தில் உன்னை பார்த்துக்க கண்டிப்பா ஒரு ஆள் தேவை. இப்போ உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன். எனக்கு அப்புறம் உன்னை யார் பார்த்துக்கொள்வார்? அதனால் நீயும் பாக்யாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்ட கோபி, அது எப்படி முடியும், பாக்ய என் மேல எவ்வளவு கோவமா இருக்கானு உங்களுக்கே தெரியும்ல என்று கோபி சொல்ல, நீதான் பழைய மாதிரி இல்லையே என்று ஈஸ்வரி பதில் சொல்கிறாள்.

நீ பழைய மாதிரி இல்லை, நீ திருந்திட்டேனு எல்லோருக்கும் தெரியும். உன் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சி சரியாக வேண்டும் என்றால் நீ பாக்யாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்ட கோபி, அதற்கு பாக்யா ஒப்புக்கொள்ள மாட்டாள் என்று கோபி சொல்கிறார். பாக்ய சம்மதிததால் உனக்கு ஓகேவா என்று ஈஸ்வரி கேட்க கோபி அமைதியாக இருக்கிறார். இதை பார்த்த ஈஸ்வரி உனக்கு சம்மதம்னு எனக்கு தெரியுது என்று சொல்கிறார்.

Advertisment
Advertisement

அதன்பிறகு, பாக்யா சமைத்துக்கொண்டிருக்க, அங்கு வந்து உட்காரும் ஈஸ்வரி, இன்னைக்கு சாப்பாடு நல்ல இருந்துச்சு என்று பாக்யாவிடம் சொல்ல் அவரது கோபத்தை தணிக்கிறார். அப்போது பாக்யா உங்களுக்கு எதாவது செய்து தரவா என்று கேட்க, வேண்டாம் நீதான் என்மீது கோபமாக இருக்கியே என்று ஈஸ்வரி சொல்ல, உங்க மேல கோபம் இல்லை வருத்தம் தான் என்று பாக்யா சொல்கிறாள். அதன்பிறகு ஈஸ்வரி சொந்தக்காரங்க கதையை சொல்லி ஒரு ஆம்பிளை துணை வேண்டும் என்று பாக்யாவுக்கு சொல்கிறார்.

இதை கேட்ட பாக்யா, ஆம்பிளை துணை இல்லாமல் பெண்ணால் வாழ முடியும் என்று சொல்ல, உங்க மாமா இல்லாம நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று பார்த்தியா என்று ஈஸ்வரி கேட்கிறார். இதற்கு பாக்யா, மாமா மாதிரி நல்ல மனுஷன் கூட வாழ்ந்துட்டு பிரிஞ்சா கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் உங்க மகன் கூட இருந்து பிரிந்ததால் சந்தோஷமாகத்தான் இருக்கேன் என்று சொல்கிறாள். இதை கேட்ட ஈஸ்வரி அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.

அதன்பிறகு இப்படி பேசினால் ஒன்றும் முடியாது இதற்கு வேறு மாதிரி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஈஸ்வரி, செழியனை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்கிறார். அங்கு எழிலையும் வர சொல்கிறார். அங்கு மூவரும் சந்தித்து பேச, பாக்யாவுக்கும் கோபிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக ஈஸ்வரி சொல்கிறார். இதற்கு செழியன் ஒப்புக்கொள்ள, எழில் மறுக்கிறான். அம்மாவுக்கு துணை வேண்டும் என்றால் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளட்டும் நானே செய்து வைக்கிறேன் என்று சொல்கிறான்.

இதை கேட்ட ஈஸ்வரி பாக்யா ஒப்புக்கொண்டால் உனக்கு ஓகே தானே என்று எழிலிடம் கேட்க அவனும் ஒப்புக்கொள்கிறான். ஆனால் அம்மா இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டாங்க என்று எழில் சொல்ல அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Read Entire Article