ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றி சான்றிதழை பெற்ற தி.மு.க. வேட்பாளர்

3 hours ago
ARTICLE AD BOX

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்தது. இதில் தொடக்கம் முதலே தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் முன்னிலை பெற்றார். இந்த நிலையில் 20 சுற்றுகள் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த நிலையில் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில், ஒரு கட்சி தன்னுடைய டெபாசிட்டை உறுதி செய்வதற்கு மொத்தம் 25,777 வாக்குகள் தேவையாக இருந்தன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி 24,151 வாக்குகளே பெற்றிருந்தன. இதனால், நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்துள்ளது. இந்த தேர்தலில், நோட்டாவுக்கு 6,109 வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமாருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி வழங்கினார்.


Read Entire Article