ஈரோடு கிழக்குத்தொகுதி தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

6 hours ago
ARTICLE AD BOX

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி உள்பட 58 வேட்பாளா்கள் மனுக்களை தாக்கல் செய்தனா்.

இதில் 3 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 55 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலை இருந்தது.மேலும், 8 வேட்பாளா்கள் மனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா்.

இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 46 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளதாக ஈரோடு கிழக்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.

பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா: ஆளுநர் ஒப்புதல்

இதனைத் தொடா்ந்து வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடா்ந்து அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வாக்குப்பதிவு செய்கின்றனர். இதற்காக 209 முதியோர், 47 மாற்றுத்திறனாளிகள் என 256 பேர் 12டி விண்ணப்பம் அளித்து விருப்பம் தெரிவித்தனர். அவர்களிடம் வரும் 27 ஆம் தேதி வரை தபால் வாக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக 4 குழுக்களாக 40-க்கும் மேற்பட்ட தேர்தல் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read Entire Article