இஸ்ரேல் பஸ்களில் வெடி விபத்து; தீவிரவாத தாக்குதலா?

3 days ago
ARTICLE AD BOX

Israel Serial Bus Blast: இஸ்ரேலின் முக்கியமான டெல் அவிவ் நகருக்கு தெற்கே பேட் யாம் என்ற இடத்தில் மூன்று பஸ்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதுவரைக்கும் இந்த வெடி விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்ல. இது தீவிரவாத தாக்குதலா இருக்க வாய்ப்பிருக்குன்னு போலீஸ் சொல்லிட்டு அந்த ஏரியாவுல பாதுகாப்பை அதிகப்படுத்தி இருக்காங்க. 

பேட் யாமில்  மூணு பஸ்ல வெடி!
இஸ்ரேல் போலீஸ் சொல்றபடி, வியாழக்கிழமை சாயங்காலம் Bat Yam நகரில் மூன்று பஸ்களில் வெடி வெடித்து இருக்கிறது. ஆனா, இந்த சம்பவத்துல யாருக்கும் அடிபடல. இது தீவிரவாத தாக்குதலா இருக்க வாய்ப்பிருக்குன்னு போலீஸ் சொல்லிட்டு விசாரணை பண்ணிட்டு இருக்காங்க.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு கூட்டம் 
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்த வெடிக்கு காரணம் பாலஸ்தீன தீவிரவாத அமைப்புதான்னு சொல்லியிருக்காரு. அதே மாதிரி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு கூட்டம் கூட்டி இருக்கிறார். போலீஸ் அதிகாரி சொன்னதுல, மூணு பஸ்ல வெடிச்சது, இன்னும் ரெண்டு பஸ்ல வச்சிருந்த குண்டுகள சரியான நேரத்துல கண்டுபிடிச்சு செயலிழக்க வச்சிட்டாங்க. அந்த ஏரியாவுல சந்தேகமா யாராவது இருக்காங்களானு போலீஸ் தேட ஆரம்பிச்சுட்டாங்க, குண்டு வெடிக்காம பாத்துக்குற குழு  அங்க இருக்காங்க.

சந்தேகமான பொருள் இருந்தா பக்கத்துல போகாதீங்க 
Bat Yam மேயர் ட்விகா பிராட் வீடியோவுல பேசும்போது, இந்த வெடி விபத்துல யாருக்கும் காயம் எதுவும் இல்லன்னு சொன்னாரு. மக்கள் எல்லாரும் உஷாரா இருக்கணும், சந்தேகமா ஏதாவது பொருள் இருந்தா பக்கத்துல போகாதீங்கன்னு என்று போலீஸ் சொல்லியிருக்காங்க.

பாலஸ்தீனிய தீவிரவாதிகள் நிறைந்த வெஸ்ட் பேங்கில் தொடர்ந்து கடந்த 2023, அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் தாக்குதல் நடந்தது வருகிறது. அந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்குள் நுழைவதை இஸ்ரேல் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளது.

வேஸ்ட் பேங்க் நகரமான துல்கரேமைச் சேர்ந்த ஹமாஸின் ராணுவப் பிரிவான கஸ்ஸாம் பிரிகேட்ஸின் ஒரு கிளையாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு குழு, டெலிகிராமில் பதிவிட்டுள்ளது: “எங்கள் நிலங்களில் ஆக்கிரமிப்பு இருக்கும் வரை, எங்களது தியாகிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை பழிவாங்க நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.” என்று பதிவிட்டுள்ளனர். ஆனால், இந்தக் குழு இதுவரை தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

Read Entire Article