இவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து… இனி எந்த பொருளும் வாங்க முடியாது… அரசு அதிரடி…!!!

5 hours ago
ARTICLE AD BOX

ரேஷன் கார்டு என்பது ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடும்ப அட்டை ஆகும். ரேஷன் திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு அனைவருக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியம். இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரசிடம் இருந்து பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன. அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மட்டுமல்லாமல் நிதி உதவியும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் பலரும் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காதவர்களுக்கு பெரிய பிரச்சனை காத்திருக்கின்றது.

அதாவது இதுவரை அனைத்து உறுப்பினர்களின் கேஒய்சி செய்யாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்து ரேஷன் உதவிகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த உறுப்பினர்களின் பெயர்களும் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படும். உத்திரபிரதேச மாநிலத்தில் கேஒய்சி சரிபார்ப்புக்கான போர்டல் மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து கேஒய்சி சரிபார்ப்பு செய்து எட்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களின் கேஒய்சி சரிபார்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.

போர்டல் மீண்டும் தொடங்கப்படாவிட்டால் கேஒய்சி செய்யாத இந்த உறுப்பினர்களுக்கு ரேஷன் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் ரேஷன் கார்டு மூலமாக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து உறுப்பினர் இறந்த பிறகும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டு மோசடி செய்வதை தடுக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டில் நடைபெறக்கூடிய மோசடிகளை தடுப்பதற்காக கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேஒய்சி சரிபார்ப்பு என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஒரு சில மாநிலங்களில் ரேஷன் கார்டு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ரேஷன் கார்டு விதிமுறைகள் என்பது கடுமையாக இல்லை. ஆனால் விதிமுறைகளை சரியாக பின்பற்றுவது ரேஷன் அட்டைதாரர்களுக்கு நல்லது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Read Entire Article