ARTICLE AD BOX
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: லண்டனில், 8ம்தேதி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது நாட்டுக்கு பெருமையளிக்கும் சாதனையாகும். 1976 அன்னக்கிளி திரைப் படத்தில் அறிமுகமான ஆரம்ப நிலையிலேயே, இசைப் பயணத்தின் திசை வழியை தீர்மானிக்கும் சக்தியாக வெளிப்பட்டவர், இன்று சர்வதேச நாடுகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்து, ஜொலித்து வருகிறார். இளையராஜாவின் லண்டன் இசைப் பயணம் சிகரம் தாண்டி, உலகை வெல்லும் வெற்றிப் பயணமாக அமையட்டும்.
The post இளையராஜாவுக்கு முத்தரசன் வாழ்த்து appeared first on Dinakaran.