ARTICLE AD BOX
சென்னை, கரூர் உட்பட பல இடங்களில், இன்று காலை முதலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் வீடு என சென்னை, கரூரில் சோதனை நடக்கிறது.
துப்பாக்கி ஏந்திய காவலர்கள்
இந்நிலையில், சென்னையில் உள்ள மண்ணடி பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின், தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று 4 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: முன்னாள் மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!
கட்சி அலுவகத்தில் சோதனை
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் ஆதரவு அமைப்பான பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா, கடந்த 2022ல் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அக்கட்சியின் நிரிவாகிகள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
பணமோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆகியவற்றின் கீழ் ஏற்கனவே பல சோதனை நடைபெற்று ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெறுகிறது.
இதையும் படிங்க: #Breaking: முன்னாள் மின்வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!