ARTICLE AD BOX
சென்னை: மலையாள நடிகர், நடிகைகளை வைத்து எஸ்.எம் இயக்கியுள்ள முழுநீள ஆக்ஷன் திரில்லர் படம், ‘லீச்’. புக் ஆஃப் சினிமா புரொடக்ஷன் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார். அருண் டி.சசி ஒளிப்பதிவு செய்ய, கிரண் ஜோஸ் இசை அமைத்துள்ளார். ரஃபீக் அஹமத், விநாயக் சசிகுமார், அனூப் ரத்னா பாடல்கள் எழுதியுள்ளனர். எஸ்எஃப்சி ஆட்ஸ் படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு பேசும்போது, ‘இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும்போதும், ரசிக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆனால், இந்த மேடையில் அவரது பாடல்களை நிஜாம் பாடியபோது பதற்றமாக இருந்தது. காரணம், காப்பிரைட் விஷயம் பயமுறுத்துகிறது. நீங்கள் (இளையராஜா), கேட்பதற்கு மட்டும்தானா பாட்டு போடுகிறீர்கள்? அதை நாங்கள் பாட வேண்டாமா? இல்லை என்றால் சொல்லிவிடுங்கள், என் பாட்டை யாரும் பாட வேண்டாம் என்று’ என்றார். தயாரிப்பாளரும், நடிகருமான அனூப் ரத்னா பேசும்போது, ‘நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட், மிமிக்ரி ஆர்டிஸ்ட், குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். ஆனால், சினிமாதான் எனது இலக்காக இருந்தது’ என்றார்.