2025-ன் 2 மாதங்களில் சூப்பட் ஹிட் அடித்த 3 படங்கள்! என்னென்ன தெரியுமா?

5 hours ago
ARTICLE AD BOX

Superhit Tamil Films So Far In 2025 : 2025ஆம் ஆண்டு ஆரம்பித்து, 2 மாதங்கள்தான் முடிந்துள்ளது. அதற்குள்ளாகவே, பல படங்கள் வெளியாகி அவற்றில் சில தோல்வியையும் தழுவியுள்ளன. அதில், ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய படங்களையும், எதிர்பாராமல் ஹிட் அடித்த படங்களையும் இங்கு பார்ப்போம்.

டிராகன்:

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் படம், டிராகன். இந்த படத்தை ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஊதாரித்தனமாக திரியும் இளைஞன், இரண்டாம் வாய்ப்பு கிடைத்தவுடன் எப்படி மாறினான் என்பதை வைத்துதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலரே ரசிகர்களை இருக்கும் வகையில் இருந்தது. படம், கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியானது. தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் காெண்டாடப்பட்டு வரும் இந்த படம், வெளியான 14 நாட்களில் மொத்தம் சுமார் 80 கோடியை கலெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மத கஜ ராஜா:

விஷால் நடிப்பில் 13 வருடங்களுக்கு முன்பு உருவான படம், மத கஜ ராஜா. இந்த படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். ஜாலியான கதை களத்துடன் உருவாகியிருந்த இந்த படம், இனி வெளிவரவே வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், அதை பொய்யாக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியானது. யாரும் எதிர்பாராத வகையில் படம் அனைவருக்கும் பிடித்துப் போக, பொங்கல் வின்னராக இந்த படமே மாறியது. இறுதியில், இப்படம் சுமார ரூ.60 கோடி கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது.

குடும்பஸ்தன்:

மணிகண்டன் நடிப்பில் உருவான படம், குடும்பஸ்தன். இந்த படத்தை நக்கலைட்ஸ் இயக்குனர் ராஜேஷ்வர் காளி சாமி இயக்கி இருந்தார். ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பஸ்தன் நிலையை காமெடியாக சொன்ன படம்தான் இது. குட் நைட், லவ்வர் உள்ளிட்ட எதார்த்தமான கதைகளின் வெற்றிக்கு பிறகு, இந்த படமும் ஹிட் அடித்தது. மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் உலக அளவில் சுமார் ரூ. 28 கோடியை வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  தற்போது இந்த படம் ஜீ5 ஓ டி டி தளத்திலும் வெளியாகிறது. நாளை முதல் இந்த படத்தை ஓடிடியில் படத்தை பார்க்கலாம். 

மேலும் படிக்க | 2024-ல் பெரிதும் ஏமாற்றிய 2 தமிழ் படங்கள்! ஒன்னு கங்குவா..இன்னொன்னு எது தெரியுமா

மேலும் படிக்க | 2024-ல் தோல்வி படங்களை கொடுத்த டாப் 10 ஹீரோக்கள்! நம்பர் 1 இடத்தில் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article