இளைய தளபதி என்ற பெயர் எனக்கு வந்தது எப்படி? அவர்தான் காரணம்… வௌிப்படையாக சொன்ன நடிகர் விஜய்!

2 hours ago
ARTICLE AD BOX

எந்த துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அதில் மிக சிறந்த இடத்தை அடையும் போதோ அல்லது அப்படி சிறப்பாக தன்னை வெளிப்படுத்தி வெற்றி பெற ஊக்குவிக்கும் பொருட்டோ பட்டப் பெயர்கள் உருவாகி விடுகின்றன. இது சினிமாவில் மட்டுமல்ல, அரசியல் விளையாட்டு துறைகளிலும் காணப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் இசைப்புயல் ஏஆர் ரகுமான் கேப்டன் விஜயகாந்த் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் என இப்படி பல பெயர்களில் பட்டப் பெயர் வைத்து அழைக்கப்படுகின்றனர். அரசியலில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சி செல்வி ஜெயலலிதா தளபதி ஸ்டாலின் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர்.

அந்த வரிசையில் நடிகர் விஜய் நடிக்க வந்த ஆரம்பத்தில் சில படங்களில் நடித்த பிறகு அவரை இளைய தளபதி என்று அழைத்தனர். பிறகு நிறைய படங்களில் நடித்த பிறகு அவரது இளைய தளபதி என்கிற அடைமொழி தளபதி என மாற்றப்பட்டது. இப்போது தளபதி என்றே அவரை ரசிகர்கள் அழைக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி துவங்கிய பிறகு விஜய் என்பதை தவிர்த்து தலைவர் தளபதி என்றே அவரது கட்சியினர் தொண்டர்கள் அழைக்கின்றனர். அரசியலில் தளபதி ஸ்டாலின் என்று இருந்தாலும் இப்போது தளபதி விஜய் என்ற கோஷம் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அதிகரித்து வருகிறது.

இளைய தளபதி பட்டம் குறித்து ஒரு நேர்காணலில் நடிகர் விஜய் கூறியதாவது, என்னோட முதல் படம் ரிலீஸாகி இருந்தது. அப்போது ரசிகர்கள் எனக்கு லெட்டர் எழுதுவார்கள். அப்படி வந்த ஒரு லெட்டரில் நான் படிச்சேன். அப்போதுதான் ரஜினி சார் நடிச்ச தளபதி படம் ரிலீஸான டைம். அப்போ அந்த ரசிகர் என்ன நெனைச்சாருன்னு தெரியலை.

அந்த லெட்டர்ல அவர் இளைய தளபதி அப்படீன்னு என்னை மென்சன் பண்ணி எழுதியிருந்தார். அதனால் அவர் வெச்சதுதான் இந்த இளைய தளபதி என்ற பெயர் என்று விஜய் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது கூறியிருக்கிறார். தளபதி படத்தில் ரஜினியை பார்த்துவிட்டு, நடிகர் விஜயை இளைய தளபதி என அந்த ரசிகர் கூறியிருப்பதால், அப்போதே தன்னை சின்ன ரஜினியாக ரசிகர்கள் பார்த்ததை தான் நடிகர் விஜய் சூசகமாக சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இளைய தளபதி என்ற பெயர் எனக்கு வந்தது எப்படி? அவர்தான் காரணம்… வௌிப்படையாக சொன்ன நடிகர் விஜய்! appeared first on cinema.cricglitz.com.

Read Entire Article