ARTICLE AD BOX
மதுரை விமான நிலையத்தில் இன்று அதிரடியான சோதனையின் போது, இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 64 அரிய வகை உயிரினங்களை சுங்கத்துறையின் நுண்ணறிவு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
Advertisment
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் மதுரையை வந்தடைந்த வேலூரைச் சேர்ந்த ஒருவர், தனது பயணப் பெட்டியில் இந்த உயிரினங்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெட்டியைத் திறந்த போது, அதில் அரிய வகை ஆமைகள், பாம்புகள் மற்றும் பல்லிகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், இலங்கை விமான நிலையத்தில் சந்தித்த ஒருவர் இந்தப் பெட்டியை “சாக்லேட் உள்ளது” என கூறி மதுரை விமான நிலையத்தின் வெளியே உள்ள நபரிடம் கொடுக்க சொல்லியதாக பயணி வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.