ARTICLE AD BOX
தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம் விட போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு கூறிவரும் நிலையில் இலங்கையின் இந்த நடவடிக்கையால் மீனவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரம் புதுக்கோட்டை கன்னியாகுமரி நாகை காரைக்கால் மீனவர்களின் 67 படகுகளை ஏலம் விட போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 2020ல் ஏலம் விடப்பட்ட படகுகள் இரும்புகளாக மாற்றப்பட்ட விற்பனைக்கு அனுப்பப்பட்டது. தற்போது 2024ல் பிடிக்கப்பட்ட படகுகளையும் ஏலம் விடப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஊரக வேலைத் திட்ட மோசடி: நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்