ARTICLE AD BOX
தமிழக மீனவர்கள் பத்து பேர் இன்று காலையில் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பத்து பேரும் இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்தைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் பயன்படுத்திய மூன்று படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட பத்து மீனவர்களையும் அந்நாட்டுக் கடற்படையினர் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.