இரவு நேரத்தில் இந்த '5' பழங்களை சாப்பிடாதீங்க!! உண்மை தெரிஞ்சா தொடகூடமாட்டீங்க

3 hours ago
ARTICLE AD BOX

Fruits To Avoid Eating At Night : பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், இரவு நேரத்தில் சில பழங்களை சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

இரவு நேரத்தில் இந்த '5' பழங்களை சாப்பிடாதீங்க!! உண்மை தெரிஞ்சா தொடகூடமாட்டீங்க

பழங்கள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அவற்றில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன. மேலும் பல நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றன. இதனால்தான் தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத பழங்கள்

இருப்பினும், பழங்களை சாப்பிடுவதற்கு என சரியான நேரம் உள்ளது. அதாவது காலை உணவுக்கு பிறகு மதிய உணவுக்கு முன் பழங்கள் சாப்பிட சிறந்த நேரம் என்று கூறப்படுகிறது. வேண்டுமானால் மதிய உணவிற்கு பிறகு கூட பழங்களை சாப்பிடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் இரவில் அதுவும் தாமதமாக உணவு பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  பலர் இரவு உணவிற்குப் பிறகு பழங்களை சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் சில பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே எந்தெந்த பழங்களை இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள்

ஆப்பிள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லப்படுகிறது. இதில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை பல நோய்களிலிருந்து நம்மை விலக்கி வைக்கின்றன. ஆனால் இரவு நேரத்தில் ஆப்பிள் சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். காரணம் இது அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் தான்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் வாழைப்பழத்தில் இரவு நேரத்தில் சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்குதன் விளைவிக்கும். இரவில் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். மேலும் ஜீரணிக்கு அதிக நேரம் எடுக்கும். இதனால் உங்களது தூக்கம் பாதிக்கப்படும்..

இதையும் படிங்க:  வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க இந்த 9 பழங்களை சாப்பிடுங்க!!

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, திராட்சை போன்ற சில்ரன்ஸ் பழங்களில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் ஆரோக்கியத்திற்கு நன்மை என்றாலும், இரவு நேரத்தில் சாப்பிடுவது வயிற்று தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே இரவில் சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க: சம்மர் வந்தாச்சு...மக்களே இந்த பழம் கிடைத்தால் விட்டுடாதீங்க

தர்பூசணி

தர்பூசணி கோடைகாலத்தில் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இது உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும். ஏனெனில் இதில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால், உங்களது உடலை நீரேற்றம் செய்யும். ஆனால் இதில் சர்க்கரையும் நிறைந்துள்ளதால், இரவில் இதை சாப்பிட்டால் உங்களது ரத்த சர்க்கரை அதிகரிக்கும்.

 

சப்போட்டா

சப்போட்டா பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடல் சோர்வை நீக்கும் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இந்த பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்ட கூடாது. காரணம் சப்போட்டாவில் சர்க்கரை நிறைய உள்ளதால் இது உடலில் சர்க்கரை மற்றும் ஆற்றலின் அளவை அதிகரிக்கும். இதுதவிர, உங்களது தூக்கத்தை பாதிக்கும்.

Read Entire Article