இரவு தூங்கும் முன்பு இப்படி ஒரு ஸ்பூன் தேன்... வறட்டு இருமலை விரட்டுங்க: டாக்டர் ஷர்மிகா

12 hours ago
ARTICLE AD BOX

எத்தனையோ உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு பெரிய அளவில் மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், சில நேரங்களில் அவை எளிதான வீட்டு வைத்திய முறையில் சரியாகி விடும். அப்படி ஒரு வீட்டு வைத்திய குறிப்பு குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

Advertisment

சிலருக்கு இரவு நேரத்தில் கடுமையான இருமல் வரும். குறிப்பாக, அடிவயிற்றில் இருந்து வரும் இந்த வறட்டு இருமல் நாளடைவில் பெரும் தொல்லையாக மாறிவிடும். இதற்காக எத்தனையோ மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் பலன் அளிக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.

இந்த வறட்டு இருமல் பிரச்சனைக்காக வீட்டு வைத்திய முறையில் தீர்வு காண முடியும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். அதன்படி, சற்று வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு டேபிள் ஸ்பூன் சுத்தமான தேனை கலந்து இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக குடிக்க வேண்டும். 

இப்படி செய்யும் போது வறட்டு இருமல் பிரச்சனை உடனடியாக நிற்கும் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். குறிப்பாக, வீட்டு வைத்திய முறையை பின்பற்றும் போது, அவை விரைவாக குணமடையாது என்று கூறுவார்கள். எனினும், இந்த தேன் கலந்த தண்ணீரை குடித்தால் வறட்டு இருமல் தொல்லை சரியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

இந்த செயல்முறையை தன்னிடம் ஆலோசனை பெற வரும் நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதாக கூறும் மருத்துவர் ஷர்மிகா, தானும் சில சமயங்களை இதனை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார். இந்த மருந்து, வறட்சி தன்மை, செரிமான கோளாறு மற்றும் தொற்று காரணமாக ஏற்படும் வறட்டு இருமல் குணமடைவதற்கு பெரிதும் உதவி செய்கிறது. 

நன்றி - DAISY HOSPITAL Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read Entire Article