ARTICLE AD BOX
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவன ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. ஆலையில், சி.ஐ.டி.யூ தொழிலாளர்கள் மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்ததற்கு, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையில் பணியில் இருந்த போது விதிமுறைகளை மீறியது , உணவு இடைவேளை முடிந்த பின்பும், பணிக்கு திரும்பாதது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி மூன்று தொழிலாளர்களை, நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நோட்டீஸ் கொடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை தேனாம்பேட்டையில் சிஐடியூ மாநில செயலாளர் முத்துக்குமார், ஆலை நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.