ARTICLE AD BOX
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
Advertisment
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணி முதல் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில் தொடங்கி நடக்கிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் ஆடுவதாக அறிவித்துள்ளது.