‘இயற்கையின் சிறிய தூதர்களுக்கு ஓர் அஞ்சலி’

8 hours ago
ARTICLE AD BOX

உலக சிட்டுக்குருவிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம்தேதி கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை கவனத்தில் கொள்ள, சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க, சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் பாதுகாப்பின் அவசியத்தையும் பிரதிபலிக்க, மக்களுக்கும் சிட்டுக்குருவிகளுக்கும் இடையிலான உறவைக் கொண்டாட உலக சிட்டுக்குருவிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது இயற்கை மற்றும் கலாச்சார நிலப்பரப்புகளில் இந்தப் பறவைகளின் முக்கியத்துவத்தையும் இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.

அதுமட்டுமின்றி நகர்ப்புற சூழல்களில் சிட்டுக்குருவிகள் மற்றும் பிற பொதுவான பறவைகளின் பாதுகாப்பை ஊக்குவிப்பதை உலக சிட்டுக்குருவி தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அழிந்து வரும் சிட்டுக்குருவிகளின் இனங்களை காக்க சிட்டுக்குருவிகளுக்கான கூடுகள் வைப்பது, அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது, சிட்டுக்குருவிகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவது போன்ற செயல்களின் மூலம் கொண்டாடலாம்.

சிட்டுக்குருவிகள் கொசுக்களை அழிப்பதிலும், விதைகளை பரப்புவதிலும், தாவர வளர்ச்சியை அதிகரிக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், உணவுச் சங்கிலியிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்திய இயற்கை ஆர்வலர் முகமது திலாவர் என்பவரால் நிறுவப்பட்ட தி நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி உலக சிட்டுக்குருவி தினத்தை கொண்டாடும் முயற்சியைத் தொடங்கியது.

பயிர்களில் உள்ள சிறு பூச்சிகள் மற்றும் புழுக்களும் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவாக உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் அதிக லாபம் அடையும் நோக்கில் விவசாயப் பயிர்களுக்கு ரசாயன பூச்சிக் கொல்லிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த பயிர்களில் உள்ள பூச்சிகளை, உண்ணும் சிட்டுக்குருவிகளும் பெருமளவில் அழிவை சந்தித்தன.

வீட்டுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனை மற்றும் நாய்களும், நகரிலுள்ள காகங்களும் இவற்றை இரையாக உட்கொள்வது, இப்போது நகரங்களில் பெரும்பாலும் தோட்டத்திற்கு இடம் விடாமல் வீடுகளை கட்டி விடுவதால் சிட்டுக்குருவிகள் கூடுகட்ட ஏதுவான பல புதர்ச்செடிகள் கொண்ட தோட்டங்கள் இல்லாமை, இனப்பெருக்க காலங்களில் குஞ்சுகளுக்குத் தேவையான பூச்சிகள் இல்லாமல் போவதால் ஏற்படும் உயிரிழப்பு போன்றவை இவற்றின் அழிவுக்கு காரணங்களாக இருக்கலாம் என்று பரவலாகத் தெரிவிக்கப்பட்டது.

மாநகரங்கள், நகரங்களில் செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அதிர்வலைகளால் பறவைகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக பெருமளவு குறையத் தொடங்கி உள்ளது.

ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சிட்டுக்குருவி இனங்கள் உள்ளன. சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும்.

அந்த காலத்தில் உணவு சமைக்கும் முன் அரிசியை முறத்தில் போட்டு வீட்டு வாசற்படியின் முன் அமர்ந்து கல் குறுநொய் நீக்கி, புடைத்து உணவு சமைப்பார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்று முறமும் இல்லை, தானியமும் அதிகம் சிந்துவதில்லை. இதனால் சிட்டுக்குருவிகளுக்கு உணவும் கிடைப்பதில்லை.

உலக சிட்டுக்குருவிகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? என்பதற்கன விரிவான விளக்கம்:

நோக்கம்:

உலக சிட்டுக்குருவிகள் தினத்தின் முதன்மையான குறிக்கோள், சிட்டுக்குருவிகள் மற்றும் பிற பொதுவான பறவைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவற்றைப் பாதுகாக்க மக்கள் மற்றும் அமைப்புகளை நடவடிக்கை எடுக்க ஊக்குவிப்பதும் ஆகும்.

தொடக்கம்:

இந்த முயற்சியை நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி ஆஃப் இந்தியா, ஈகோ-சிஸ் ஆக்ஷன் ஃபவுண்டேஷன் (பிரான்ஸ்) மற்றும் பல தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து தொடங்கியது.

முக்கியத்துவம்:

சிட்டுக்குருவிகள் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும், அதாவது சிட்டுக்குருவிகள் உணவுச் சங்கிலிக்கு இன்றியமையாதவை, ஏனெனில் அவை கம்பளிப்பூச்சிகள், வண்டுகள் மற்றும் அஃபிட்கள் (aphids) போன்ற சிறிய பூச்சிகள் மற்றும் புழுக்களை உண்கின்றன.

இதையும் படியுங்கள்:
கவிதை - சிட்டுக்குருவி தலையில் பனங்காய்!
world sparrow day
இதையும் படியுங்கள்:
பூமியிலிருந்து விடைபெற்றுக்கொண்டிருக்கும் சிட்டுக்குருவி இனம்!
world sparrow day

இந்த உயிரினங்களில் சில தாவரங்களை அழிக்கின்றன, மேலும் சிட்டுக்குருவிகள் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இவ்வாறு நமது சுற்றுசூழலை பாதுகாத்து, செழிக்க வைக்க பேருதவி புரிந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது சுற்றுச்சூழல் அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் என சமூக சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

செயல்பாடுகள்:

பறவை கண்காணிப்பு, பறவை இல்லங்களை கட்டுதல், கல்வித் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக சிட்டுக்குருவிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகளாவிய நிகழ்வு:

இது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியுள்ளது, தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களை ஒன்றிணைத்து சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பை நோக்கிச் செயல்படுகிறது.

சிட்டுக்குருவியின் பங்கு:

ஒரு பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் குறிகாட்டியாக சிட்டுக்குருவிகள் அறியப்படுகின்றன, மேலும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரியது.

கருப்பொருள்கள்:

ஒவ்வொரு ஆண்டும், உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கவனம் செலுத்த ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைக் கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில், "இயற்கையின் சிறிய தூதர்களுக்கு ஒரு அஞ்சலி" என்பது கருப்பொருள்.

இதையும் படியுங்கள்:
இந்தப் பறவைங்க உங்க வீட்டுக்கு வந்தா துரத்தி விட்றாதீங்க!
world sparrow day
Read Entire Article