ARTICLE AD BOX
இயக்குநர் கேட்டதை Fire ரச்சிதா தாராளமா செஞ்சிருக்காங்க.. அடுத்த ஷகீலா.. வெளுத்த பிரபலம்
சென்னை: ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் Fire. ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கியிருந்த அந்தப் படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அதில் இடம்பெற்ற கிளாமர் காட்சிகள் பெரும் விவாதமாகின. குறிப்பாக ரச்சிதா மகாலட்சுமிக்கு ஒருதரப்பினர் தங்களது கண்டனத்தையும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. அந்த சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் குடும்பங்களுக்குள் எளிதாக சென்று சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனிலும் கலந்துகொண்டார். அந்த சீசனில் அவரால் டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்துவிட்டுதான் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தார். இதற்கிடையே சின்னத்திரை நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரச்சிதா அவரை பிரிந்துவிட்டார்.

முயற்சிக்கு பலனில்லை: தினேஷும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் என்பதும்; நாடகத்தில் ரச்சிதாவுடன் சேர்ந்து நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னிடமிருந்து பிரிந்த ரச்சிதாவுடன் மீண்டும் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டுமென்பதில் தினேஷ் உறுதியாக இருந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சிக்க்கு ரச்சிதா மகாலட்சுமி சின்ன ரெஸ்பான்ஸைக்கூட கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்தே இருக்கிறார்கள்.
டிராகன் ஃபயர்தான் போங்க.. இரண்டாவது நாளில் அடித்து நொறுக்கிய வசூல்.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?
படங்களில் வாய்ப்பு: சூழல் இப்படி இருக்க ரச்சிதா மகாலட்சுமிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்திருக்கும் ஃபயர் படத்தில் ரச்சிதா நடித்திருக்கிறார். இதில் அவர்களுடன் சாக்ஷி அகர்வால், சாந்தினி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். படமானது சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
ஓவர் கிளாமர்: உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது. ஆனால் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பாக கிளாமர் காட்சிகளை கண்டு ரசிகர்கள் ஷாக்காகிவிட்டனர். அந்த அளவுக்கு படுக்கயறை காட்சிகளும், நெருக்கமான காட்சிகளும் இருந்தன. அதிலும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் கிளாமர் காட்சிகள் கொஞ்சம் ஓவர் டோஸாகவே இருந்தன. அதனைப் பார்த்த ஒருதரப்பினர் ரச்சிதாவை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
நீங்கள் நல்லவரா கெட்டவரா?.. முன்வைக்கப்பட்ட கேள்வி.. தக் பதில் கொடுத்த கமல் ஹாசன்
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஃபயர் படத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்ததை பார்த்து ஷகீலா படத்தை பார்ப்பது போல்தான் இருந்தது. இந்தப் படத்துக்கு குடும்ப பாங்கான பெண்ணை இயக்குநர் தேடி ரச்சிதாவை ஃபிக்ஸ் செய்திருக்கிறார். ஆனால் கிளாமர் எல்லாம் ஓவராகத்தான் இருக்கிறது. இயக்குநர் என்ன கேட்டாரோ அதற்காக தாராளமாக செய்திருக்கிறார் நடிகை. இந்தப் படத்தை குடும்பத்தினருடன் சென்று பார்க்கவே முடியாது.
ரச்சிதாவுக்கு மட்டுமில்லை மற்ற ஹீரோயின்களுக்கும் இதுமாதிரியான சீன்களை வைத்திருக்கிறார். ஆக அவரை பொறுத்தவரை படத்தை எப்படியாவது ஓட வைத்துவிட வேண்டுமென்றுதான் எண்ணம் இருந்திருக்கிறது. இயக்குநர் எங்கேயோ ஸ்லிப் ஆகியிருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. ரச்சிதா ஒன்றும் ஏமாந்துபோயோ இல்லை சமூக சேவைக்காகவோ இப்படியெல்லாம் நடிக்கவில்லை"என்றார்.