ARTICLE AD BOX
தினம் தினம் ஐஸ்க்ரீமா?
தினம், தினம் ஐஸ் கிரீம் சாப்பிடுவதால் நம் உடலில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி அன்றாடம் ஐஸ்கிரீம் சாப்பிடும் போது நம் உடல் எவ்வளவு அவஸ்தைகளை பெறும் என்பது பற்றி பார்க்கலாம்.
அதிக கொழுப்பு
ஐஸ்கிரீம் தயாரிக்க அதிக கொழுப்பு இருக்கும் சர்க்கரை மற்றும் கிரீம்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும், ஐஸ்கிரீம்களில் பால் பொருட்களின் நிறைவான கொழுப்புகள் உள்ளடங்கி இருக்கிறது. இதனால், இது உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. ஆகவே இதய நோய் அபாயம் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: காலை எழுந்ததும் இதை செய்ய மறந்துடாதீங்க..!
அதிக கலோரி
இந்த ஐஸ்கிரீம்களில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால் இது உடலுக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும். மேலும், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உட்கொள்வதால் உடலில் கொழுப்பை தேக்குகிறது. ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று ஐஸ்கிரீம்களை சாப்பிடும் போது தோராயமாக 1000 கலோரிகள் உடலில் சேருகின்றன.
ஆபத்துமிக்க உணவுகள்
எப்போதாவது ஐஸ் கிரீம் சாப்பிடுபவர்களை விட இதுபோல ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களுக்கு ஆபத்து அதிகம். இது மட்டுமல்லாமல் கேக், மிட்டாய், பாஸ்தா, ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிகம் கொண்டுள்ள உணவுகளை சாப்பிடும் போது நமக்கு மாரடைப்பு ஏற்படுகின்ற அபாயம் அதிகம் உள்ளது.
எனவே இது போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அன்றாடம் ஐஸ்கிரீம் சாப்பிடுவது எவ்வளவு ஆபத்து என்பதை உணர்ந்து அதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.?!