இன்றைய ராசி பலன்கள் - மார்ச் 15 - 2025 சனிக்கிழமை

4 hours ago
ARTICLE AD BOX

இன்றைய ராசி பலன்கள் - மார்ச் 15 - 2025 சனிக்கிழமை

Astrology
lekhaka-Bernadsha A
Subscribe to Oneindia Tamil

சென்னை

குரோதி வருடம் பங்குனி மாதம் 1ஆம் தேதி சனிக்கிழமை 15.03.2025

சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று பிற்பகல் 02.38 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று காலை 09.02 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.

அவிட்டம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

ஏதாவது ஒரு மனக்கவலை இதயத்தை அழுத்துவதால் தூக்கம் இழப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான பணத்தை திரட்ட சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவும் குழப்பமான போக்கால் முடிவு எடுக்க தடுமாறுவீர்கள்.. பணத்தைக் கையாளுவதில் கவனம் இல்லை என்றால் இழப்பை சந்திப்பீர்கள். வியாபாரம் சற்று சறுக்கல் ஆக நடப்பதால் சங்கடப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்

ரிஷபம்

சிறிய தொழில் தொடங்குவீர்கள். அதற்கான அரசாங்கக் கடன் பெறுவீர்கள். வெளிவட்டாரப் பழக்கங்களால் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பள்ளிப் பிள்ளைகள் படிப்பில் அக்கறையாக படிப்பீர்கள். அரசாங்க வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் கூடும். காதலிக்காக கடன் வாங்கி செலவு செய்வீர்கள். நண்பரிடம் உதவி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்

மிதுனம்

திடீரென்று பணம் வந்து திக்கு முக்காடி போவீர்கள். தொழிலை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். வீட்டில் மக்கள் செல்வம், மழலைச் சத்தம் கேட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். கணினித்துறையில் சாதனை நிகழ்த்துவீர்கள். பெரியோர்களின் அன்பும் ஆசியும் பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் வருமானத்தை அதிகரிப்பீர்கள்
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3

கடகம்

கடகம்

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் நகைகள் வாங்கி சந்தோஷப்படுவீர்கள். சகோதர உறவுகள் உதவியால் பிரச்சனையிலிருந்து மீண்டு வருவீர்கள். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமையை விலக்குவீர்கள். அண்டை வீட்டாருடன் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்

சிம்மம்

இன்று நீங்கள் எதிர்பாராத நன்மைகள் அடைவீர்கள். தொழிலில் நினைத்ததைவிட லாபம் பெறுவீர்கள். வியாபாரம் முன்னேற்றமாக நடப்பதால் பணவரவு அதிகரித்து மன மகிழ்ச்சி கொள்வீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் பரபரப்பாக இருக்கும். பங்குப் பரிவர்த்தனையில் பெருந்தொகையை முதலீடு செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி

கன்னி

வளர்பிறைச் சந்திரன் என்பதால் நஷ்டங்கள் குறைந்து நிம்மதி அடைவீர்கள். சின்னச் சின்னத் தோல்விகளை தாண்டி வருவீர்கள். நீர்க்கட்டி பிரச்சினைக்காக மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வீர்கள் . வியாபாரம் சுமாராக நடந்து தொழில் துறைகளில் சிறிய பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். உறவினர்கள் உதவ மாட்டார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9

துலாம்

துலாம்

என்னதான் அக்கறையாக வேலை பார்த்தாலும் மேல் அதிகாரிகள் குறை கூறலுக்கு ஆளாவீர்கள். அவர்களை திருப்திப்படுத்த இயலாமல் திண்டாடுவீர்கள். தொழிலாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு வராததால் சிரமத்தை எதிர்நோக்குவீர்கள். . மனைவி குறை சொல்வதிலேயே குறியாக இருப்பதால் வீட்டுக்கு வர விரும்ப மாட்டீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்

விருச்சிகம்

நல்ல காரியங்களை மளமளவென்று நடத்துவீர்கள். நினைத்த இடத்தில் கேட்ட உதவியை பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசாங்கத்தில் எதிர்பார்த்த இடமாறுதலில் செல்வீர்கள். பழைய கடன்களை அடைக்க வழி தேடுவீர்கள். வாக்குத் தவறாத உங்கள் நடத்தையால் செல்வாக்கை உயர்த்துவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5

தனுசு

தனுசு

தொடரும் தோல்விகளை உங்களை விட்டு துரத்துவீர்கள். பங்குப் பரிவர்த்தனைகளில் லாபம் ஈட்டுவீர்கள். லாட்டரி யோகமும் பெறுவீர்கள். இதமான பேச்சால் எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூரிலிருந்து இனிப்பான தகவல் வந்து குடும்பத்தினரோடு குதூகலம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1

மகரம்

மகரம்

வேண்டாதவர்கள் செய்யும் தீங்கால் விசனப்படுவீர்கள். பழைய பகையால் பாதிப்படைவீர்கள். இருப்பினும் தொழில்துறைகளில் ஏற்றம் காண்பீர்கள். பங்கு பரிவர்த்தனைகளில் கணிசமான பலனைப் பெறுவீர்கள். தந்தையாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் விரயச் செலவு ஏற்பட்டாலும் நண்பரின் உதவியால் நன்மை அடைவீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9

கும்பம்

கும்பம்

யாருக்கும் வாக்குக் கொடுக்காதீர்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். நான் சொல்வதுதான் சரி என்று விவாதம் செய்யாதீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை ஒரு நாள் ஒத்தி வையுங்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யாதீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். கடன் வாங்காதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்

மீனம்

வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்குவீர்கள். நகை வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்து குஷிப்படுத்துவீர்கள். இல்லாதவர்களுக்கு பண உதவி செய்து இன்பம் காண்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டால் அலுவலகத்தில் அந்தஸ்தை உயர்த்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5

உங்கள் ஜோதிடர், கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி.
தொலைபேசி எண்: 9942987859

More From
Prev
Next
English summary
Today's Rasi Palan march 15, Saturday 2025,Get your Daily Horoscope in tamil based on your zodiac signs
Read Entire Article