இன்று முதல் பிளஸ் 2 தேர்வு தொடக்கம்.. தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!

11 hours ago
ARTICLE AD BOX

இன்று முதல் பிளஸ் 2 தேர்வு தொடக்கம்.. தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!

இன்று முதல் பிளஸ் டூ மாணவ மாணவிகளுக்கு பொது தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அரசியல் தலைவர்கள் இன்று தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பை சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுத் தேர்வினை துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்.

பொதுவாக மாணவ மாணவிகள் வளர்ச்சியில் விஜய் தீவிர அக்கறை கொண்டிருப்பார் என்பதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு விழா நடத்தை பாராட்டுக்கு தெரிவித்து பரிசுகளையும் வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்தது.

அதேபோல் வரும் ஆண்டிலும் பரிசுகள் வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் இன்று தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 Edited by Siva
Read Entire Article