ARTICLE AD BOX

சென்னை : இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. எனவே, இதனால் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதேபோல, நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. எனவே, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.