ARTICLE AD BOX
வழக்கமாக இந்தியர்கள் பாராசிட்டமால் மாத்திரையை மருத்துவரின் ஆலோசனை கூட இல்லாமால் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு எடுத்துக் கொள்கின்றனர். இதன் ஆபத்தை அவர்கள் உணர்வதில்லை. அது போல கர்ப்பிணி பெண்களும் தகுந்த ஆலோசனை இன்றி பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தவறு. அது உடல்நிலையை மோசமாக பாதிக்கலாம். புதிய ஆய்வின் முடிவுகள் கர்ப்பிணிகள் லேசான காய்ச்சல் அல்லது வலிக்கு பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் அது எதிர்மறையாக தாக்கத்தை தரும் என்று கூறப்பட்டிருக்கிறது. கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை உட்கொள்வது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதரணமாக கர்ப்ப காலத்தில் பெண்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள். இதற்காக, பெண்கள் பாராசிட்டமால் மருந்தை எடுத்துக் கொள்கிறார்கள். பாராசிட்டமால் மருந்து மிகவும் பொதுவானது, ஆனால் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மருந்து தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கிறது.
கர்ப்பிணிப் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு:
கனடா நாட்டில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ சங்கம், மகளிர் மருத்துவ நிபுணர்கள் சங்கம் மற்றும் இதுபோன்ற நிறுவனங்கள் சேர்ந்து ஒரு ஆய்வினை கர்ப்பிணி பெண்களுக்கு நடத்தின. இயல்பாக கர்ப்ப காலத்தில் அசிடமினோபன் , பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை காய்ச்சல் மற்றும் வலிக்கு பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் பாராசிட்டமால் மாத்திரையை அதிகம் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி ஆராயப்பட்டது.
பாராசிட்டமால் மருந்தை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் மன வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அந்த நிறுவனம் கண்டறிந்தது. நிபுணர்களின் கூற்றுப்படி, பாராசிட்டமால் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும், இது குழந்தையின் மன வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த மாத்திரையின் பக்க விளைவுகள் புதிதாகப் பிறந்த அவர்களின் குழந்தையின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இதை ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) என்று கூறுகின்றனர். கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சி கோளாறு ஆகும். இதனால் குழந்தைகளுக்கு கவனக்குறைவு , நிலை தன்மை இல்லாத கவனம் , சிந்திக்காமல் செயல்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
குறிப்பாக குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை இது பாதிக்கிறது. இது குழந்தை பருவத்தில் தொடங்கி நீண்ட காலம் வரை நீடிக்கும்.
பாராசிட்டமால் மருந்து உட்கொள்ளும் பெண்களின் குழந்தைகளில் கவனக்குறைவு மற்றும் கற்றல் குறைபாடு போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனால் எளிதாக மக்கள் பயன்படுத்தும் பாராசிட்டமால் மாத்திரை குறித்து சுகாதார நிபுணர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பாராசிட்டமால் மாத்திரைகளை சரியான அளவில் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.