ARTICLE AD BOX
ஜிமெயில் இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறதா? கவலை வேண்டாம்! தேவையற்ற மின்னஞ்சல்களை மொத்தமாக நீக்கி, ஸ்டோரேஜை நிர்வகிக்க எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் நிரம்பிவிட்டதா? விளம்பர மின்னஞ்சல்கள், செய்தி மடல்கள், சமீபத்திய பரிவர்த்தனைகளின் ரசீதுகள் என பலவற்றால் இன்பாக்ஸில் மின்னஞ்சல்கள் குவிந்துவிடும். ஜிமெயில் பயனர்களுக்கு, கூகுள் வழங்கும் 15 ஜிபி இலவச ஸ்டோரேஜ் வழங்குகிறது. கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் போட்டோஸ் ஆகியவையும் இந்த மெமரியை பயன்படுத்துவதால், அது விரைவாக நிரம்பிவிடும்.

கூகுள் கூடுதல் ஸ்டோரேஜ் வாங்குவதற்கான திட்டங்களை வழங்கினாலும், அது ஒருபோதும் போதுமானதாக இருக்காது. மேலும் இறுதியில் புதிய மின்னஞ்சல்கள் இன்பாக்ஸை நிரப்பிவிடும். எனவே, சிக்கலை சரிசெய்ய, உங்கள் இன்பாக்ஸ் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் ஒவ்வொரு ஈமெயிலாக நீக்குவதற்கு பல மணிநேரம் ஆகலாம்.

இந்தச் சூழலில் மின்னஞ்சல்களை எவ்வாறு மொத்தமாக நீக்கும் வசதி பயனுள்ளதாக இருக்கும். ஜிமெயில் பயனர்கள் இதை எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம். மின்னஞ்சல்களை மொத்தமாக நீக்குவதன் மூலம் உங்கள் ஜிமெயில் ஸ்ட்டோரேஜை சிறப்பாகக் கையாள முடியும்.

உங்கள் பிரவுசரில் ஜிமெயிலைத் திறந்து இன்பாக்ஸைக் கிளிக் செய்யவும். சர்ச் பாக்ஸில் 'Unsubscribe' என டைப் செய்து என்டரை அழுத்தவும். இப்போது 'Unsubscribe' என்ற அப்ஷன் கொண்ட அனைத்து புரொமோஷனல் மின்னஞ்சல்களையும் காண்பிக்கும். எல்லா நிறுவனங்களும் சட்டப்பூர்வமாக இந்த ஆப்ஷனை வழங்க வேண்டும்.

இந்த புரொமோஷன் மின்னஞ்சல்களை மொத்தமாக நீக்க, மேல் இடது மூலையில் உள்ள சிறிய செக்பாஸை கிளிக் செய்யவும். அதாவது, மின்னஞ்சல்களின் பட்டியலுக்கு மேலே இடதுபுறத்தில் இந்த செக்பாஸ் இருக்கும். இதை கிளிக் செய்தால், முதல் பக்கத்தில் காட்டப்படும் அனைத்து மின்னஞ்சல்களையும் தேர்ந்தெடுக்கும். 'Select all' என்பதைக் கிளிக் செய்தால், இந்தத் தேடலுக்கான அனைத்து உரையாடல்களையும் தேர்ந்தெடுத்துவிடும்.

அனைத்து மின்னஞ்சல்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதும், திரையின் மேற்புறத்தில் உள்ள டிராஷ் ஐகானைக் கிளிக் செய்யவும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களையும் டிராஸ் பகுதிக்கு நகர்த்திவிடும். புரொமோஷன், சோஷியல் போன்ற பிற டேப்களில் உள்ள மின்னஞ்சல்களை நீக்க விரும்பினால், அந்த டேப்களுக்குச் சென்று இதே முறையைப் பின்பற்றி ஈமெயில்களை மொத்தமாக நீக்கலாம்.