இனிப்போ இனிப்பு ரெசிபிஸ் - ரோஸ் பாயாசம்; சர்க்கரை போண்டா

4 days ago
ARTICLE AD BOX

ன்றைக்கு சூப்பர் டேஸ்டில் ரோஸ் பாயாசம் மற்றும் சர்க்கரை போண்டா ரெசிபிஸை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

ரோஸ் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்.

பால்-1 லிட்டர்.

சேமியா-75 கிராம்.

ஜவ்வரிசி-25 கிராம்.

சர்க்கரை-150 கிராம்.

ரோஸ் சிரப்-1 ½ தேக்கரண்டி.

பாதாம், பாஸ்தா-தேவையான அளவு.

ரோஸ் பாயாசம் செய்முறை விளக்கம்.

முதலில் 1 லிட்டர் பாலை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். 75 கிராம் சேமியாவை நன்றாக வறுத்து பிறகு பாலில் சேர்த்துக் கொள்ளவும்.

ஜவ்வரிசி 25 கிராமை ஒரு மணி நேரம் ஊறவைத்து அதையும் பாலில் சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் 150 கிராம் சர்க்கரையை சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ஆந்திரா ஸ்பெஷல் புலகம் அட்டகாசம்! வேர்க்கடலை சட்னி செம!
Rose payasam and sugar bonda

சேமியாவும், ஜவ்வரிசியும் நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இதில் 1 ½ தேக்கரண்டி ரோஸ் சிரப்பை சேர்த்து கலந்துவிடவும். இப்போது பாயாசம் ரோஸ் நிறமாக மாறியிருக்கும். கடைசியாக பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவை தூவி ரோஸ் இதழ்களை வைத்து பரிமாறவும். இதை 30 நிமிடம் பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான ரோஸ் பாயாசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்க.

சர்க்கரை போண்டா செய்ய தேவையான பொருட்கள்.

கோதுமை மாவு-1 கப்.

சர்க்கரை-3/4 கப்.

வாழைப்பழம்-2

ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி.

முட்டை-1

சோடா உப்பு- சிறிதளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
ரெசிபி - சுவையான உருளை ஜீரா பொரியல்; மசாலா சுண்டல்!
Rose payasam and sugar bonda

சர்க்கரை போண்டா செய்முறை விளக்கம்.

முதலில் பவுலில் 1 கப் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும். அதில் ¾ கப் சர்க்கரை, வாழைப்பழம் 2 பொடியாக நறுக்கியது, முட்டை 1, சோடா உப்பு சிறிதளவு, ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி சேர்த்து சிறிது தண்ணீர் வீட்டு நன்றாக மாவை பிசைந்துக் கொள்ளவும். கடைசியாக மெதுவடைக்கு இருக்கும் மாவு பதத்திற்கு வரும்.

இப்போது எண்ணெய்யை மிதமான சூட்டில் வைத்து அதில் மாவை சிறிது சிறிதாக போட்டு போண்டாவை நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சர்க்கரை போண்டா தயார்.

Read Entire Article