“இனி பாதியாக குறைப்பு” SBI கிரெடிட் கார்டு யூஸ் பண்றவங்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

4 hours ago
ARTICLE AD BOX

எஸ்பிஐ வங்கியானது அதனுடைய கிரெடிட் கார்டு பயனாளர்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட  ரிவார்டு புள்ளிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் sbi அதற்கான கிரெடிட் கார்டுகளுக்கான ரிவார்ட் புள்ளிகளை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி Simplyclick SBI கார்டு மூலமாக swiggy இல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு எப்போதும் போல வழங்கப்பட்டு வந்த 10 மடங்கு ரிவார்ட் புள்ளிகள் இனிமேல் ஐந்து மடங்காக குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த விதிமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மார்ச் 31ஆம் தேதியிலிருந்து ஏர் இந்தியா SBI பிளாட்டினம் கிரெடிட் கார்டு மூலமாக செய்யப்படும் விமான டிக்கெட் முன்பதிவிற்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள 100 ரூபாய்க்கு 15 ரிவார்ட் புள்ளிகள் இருந்த நிலையில் இனிமேல் ஐந்தாக குறைக்கப்படும் என்றும், ஏர் இந்தியா SBI Signature கிரெடிட் கார்டு மூலமாக விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இதுவரை 100க்கு 30 ரிவார்ட் புள்ளிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் 10 ஆக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article