ARTICLE AD BOX

ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முறையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியில் முக்கியமானது 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு அதன் பின்னர் 2 ஆண்டுகள் பி.எட் படிப்பு. அதுவே முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆசிரியராக விரும்பினால் 1 ஆண்டு பி.எட் படிக்கலாம். பொதுவாக பி.ஏ, பி.எஸ்சி ஆகிய பட்டப்படிப்புகளுடன் பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரியலாம்.
இந்தப் பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் TET தேர்வில் வெற்றி பெற்றால் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். இந்த நிலையில் இன்ஜினியரிங் மாணவர்களும் ஆசிரியர்களாக பணிபுரிய உயர் கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி உயர்கல்வித்துறைச் செயலர் கே. கோபால் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டதாவது, பி.இ, பி.எட் படிப்பு முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரியலாம்.
அதன்படி ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ படிப்பை முடித்து பி.எட் (இயற்பியல் அறிவியல்) முடித்து இருந்தால் அவர்களுக்கு அரசு பள்ளிகளில் பட்டதாரி இயற்பியல் ஆசிரியர்களாக பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும். பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்கள் பயிற்றுவிக்க தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என உயர்கல்வித்துறை செயலர் தெரிவித்திருந்தார்.