திருப்பத்தூர்: மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்!

5 hours ago
ARTICLE AD BOX

திருப்பத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (53). இவருக்கும் இரண்டாவது மனைவி தீபாவுக்கும் (வயது 35)ம் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இதையும் படிக்க : சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன்: சீமான் மனைவி

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பாவுசா நகரில் உள்ள ரமேஷின் தங்கை வரலட்சுமி வீட்டுக்கு தூங்குவதற்காக தீபா சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தீபாவின் உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் (பொறுப்பு) சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read Entire Article