ARTICLE AD BOX
Published : 23 Jan 2025 07:47 AM
Last Updated : 23 Jan 2025 07:47 AM
இந்தோனேஷியா பாட்மிண்டன்: 2-வது சுற்றில் தனிஷா - கபிலா ஜோடி
<?php // } ?>ஜகார்த்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி, இந்தோனேஷியாவின் அட்னான் மவுலானா, இன்தா கஹ்யா சாரி ஜமீல் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 19-21, 19-21, என்ற செட் கணக்கில் சீனாவின் ஷி யு குயிடமும், கிரண் ஜார்ஜ் 12-21, 10-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் ஜியோன் ஹியோக்-ஜினிடமும் தோல்வி அடைந்தனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரக்சிதா 17-21, 19-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் டொமோகா மியாசாகியிடமும், தன்யா ஹேமநாத் 14-21, 11-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானானிடமும் தோல்வி அடைந்தனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாரன்ட்களை போலீஸார் அமல்படுத்தாதது ஏன்? - கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ஆஜராக உத்தரவு
- சென்னை | போலீஸாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரி வழக்கு
- கடல் ஆமை இறப்புக்கான காரணம் உடற்கூராய்வுக்கு பிறகே தெரியும்: பசுமை தீர்ப்பாயத்தில் அரசு விளக்கம்
- சென்னை | பள்ளி சென்று திரும்பிய 3 வயது குழந்தையை கடத்திய வீட்டு பணிப்பெண், நண்பருக்கு ஆயுள் தண்டனை