ARTICLE AD BOX

எல் 2 எம்புரான் படத்தில் நடித்துள்ள இந்திரஜித் சுகுமாரனின் கதாபாத்திர போஸ்டரை எல் 2 எம்புரான் படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.’லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
டோவினோ தாமஸ் இப்படத்தில் ஜதின் ராம்தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள முக்கியமான 36 கதாபாத்திரங்களை 18 நாட்களில் வெளியிட 'எல் 2 எம்புரான்' படக்குழு திட்டமிட்டு அதன் படி ஒவ்வொரு கதாபாத்திரங்களை வெளியிட்டு வருகிறது.
Character No.08
Indrajith Sukumaran as Govardhan in #L2E #EMPURAANhttps://t.co/u7IWqmrjeZ
Malayalam | Tamil | Hindi | Telugu | Kannada #March27 @mohanlal #muraligopy @antonypbvr @aashirvadcine @Subaskaran_A @LycaProductions @gkmtamilkumaran @prithvirajprod #SureshBalaje… pic.twitter.com/gIgr9eU0Yn
அதன்படி, நடிகர் இந்திரஜித் சுகுமாரன் இப்படத்தில் 'கோவர்த்தன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.